Padma Bhushan, Padma Vibhushan, Padma Shri Awards- Tenkasi District Collector Information
6.5.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான பத்ம பூஷன்,பத்ம விபூஷன் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, குடியரசு தின விழாவில்
பத்ம விருதுகள் இந்திய குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு துறையில் சாதனை புரிந்த தகுதி வாய்ந்த நபர்கள் 2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளான “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்”(ம) “பத்ம ஸ்ரீ” ஆகிய விருதுகளுக்கு https://padmaawardsgov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்திடலாம்.
விளையாட்டு துறையில் அதிகபட்ச சாதனை புரிந்தவர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவ விபரத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ, ரயில்வே ரோடு, தென்காசி 627 811 என்ற முகவரியில் 29.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ. ரயில்வே ரோடு, தென்காசி-627811 நேரிலோ (அ) 04633 212580 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் எ.கே.கமல்கிஷோர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.