43 வயதில் கெட்ட ஆட்டம் போட்ட சிம்ரன்- தீயாய் பரவும் வீடியோ
1 min read
இடுப்பழகி சிம்ரன் ஒரு காலத்தில் இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்தவர். கவர்ச்சி வேடம் மற்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் அனைத்திலும் போட்டி போட்டு நடித்து அந்த கால ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கு ரசிகர்களின் கூட்டம் படை எடுக்கும். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஏகப்பட்ட முறை ஜோடி போட்டவர். இவருக்கு இடுப்பழகி சிம்ரன் என செல்லப் பெயரும் ரசிகர்களால் வைக்கப்பட்டது.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். கடந்த வருடம் வெளியான பேட்ட படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த சிம்ரன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில்கூட மியூசிக் வீடியோ ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அடிப்படையில் டான்சர் ஆன சிம்ரன் சமீபத்தில் ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் ஒட்டி உரசி ஆடிய ஆட்டம் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வந்தது. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.