May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

ஏமாற்றத்தில் கீர்த்தி சுரேஷ்

1 min read
Keerthi Suresh in disappointment

27.2.2020

கீர்த்தி சுரேஷ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஷ்பூ, மீனா, சதீஷ், சூரி, நயன்தாரா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்படும் போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கப் போவதாகத்தான் நினைத்துக்கொண்டு ஓகே சொல்லி உள்ளார். ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்தது சூப்பர் ஸ்டாருக்கு தங்கை வேடம் என்று.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உடல் எடையை குறைத்து ஒல்லியானதால் சரிந்து விட்டது. ஹிந்தி பட வாய்ப்பு கைவிட்டு போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கிலும் பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. மிஸ் இந்தியா என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

தமிழிலும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண் குயின் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ளது. இதனால் தற்போது சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கும் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி பட வாய்ப்பு பெரிய பெயரை பெற்றுத்தரும் என்றவருக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.