May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

இயக்குனரை வசியப்படுத்தி வச்சு செய்யும் பிரபல நடிகை

1 min read
A famous actress who seduces the director

தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் அந்த இயக்குனரும் பிரபல நடிகையும். இவர்களது காதலுக்கு சில ரசிகர்களிடம் ஆதரவும் பல ரசிகர்களிடம் எதிர்ப்புகளும் உள்ளது. இருந்தும் அவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக உலகம் சுற்றி வருகிறார்கள்.

இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இயக்குனருக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை. ஏற்கனவே பிரபல நடிகைக்கும், இயக்குனருக்கும் கல்யாணம் என்ற பேச்சு எடுத்தவுடன் பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் உஷார் அடைந்த இயக்குனர் இதுதான் சாக்கு என நடிகை போய் விடுவாரோ என்ற பயத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் செல்பியை வெளியிட்டு ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.

ஆனால் பிரபல நடிகை இவரை விட கேடி என்பது அவருக்குத் தெரியவில்லை போல. இயக்குனர் கல்யாணத்துக்கு அப்படி ரூட்டு போட்டால் நடிகை கல்யாணம் பண்ணாமல் இருப்பதற்கு வேறு ஒரு ரூட்டை கையில் எடுத்திருக்கிறார். அது வேற ஒன்றும் இல்லை. வழக்கம்போல கொஞ்சுவது தான். பேபி, தங்கம், செல்லம் என கொஞ்சினால் இயக்குனர் அப்படியே ஆஃப் ஆகி விடுகிறாராம்.

இதே வழியை பின்பற்றும் பிரபல நடிகை, இயக்குனர் வாயை திறந்தால் வாயிலேயே கொடுத்து பிளாட்டாக்கி விடுகிறாராம். இயக்குனரும் கல்யாணம் ஆகுமா ஆகாதா என குழப்பத்தில் உள்ளாராம். இருந்தும் நடிகையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அவரை வைத்து அடுத்த படத்தையும் இயக்க ரெடியாகி விட்டார்.

எப்ப இருந்தாலும் உனக்கு நான் தான் பேபி என இயக்குனரை வசியமாகி வைத்துள்ள பிரபல நடிகைக்கு திருமணம் என்ற எண்ணமே இல்லையாம். இயக்குனரின் இந்த நிலைமையைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.