மீண்டும் ரசிகர்களை உசுப்பேற்ற வரும் ஸ்ரீதிவ்யா
1 min readஸ்ரீ திவ்யா தனது மூன்று வயதிலையே திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார்.
ஸ்ரீ திவ்யா தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012ல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் நண்பர்களுடன் இணைந்து நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றது.
பின்னர் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகையாக நடித்து தமிழ் சினிமாத்துறையில் அறிமுகமானர்.
இதில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது அது மட்டும் இல்லாமல் படமும் நல்ல வெற்றி பெற்றது. பின்னர் ஸ்ரீ திவ்யா பென்சில் எனும் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை என பல படங்களில் நடித்துள்ளார்.
முதல் படத்தை தவிர எந்த படமும் இவருக்கு பெரிதாக பேசப்படவில்லை 2016ம் வருடம் மிகவும் மோசமான வருடமாக அமைந்தது பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது காஷ்மோரா ,மாவீரன் கிட்டு என்ற படம் சரியாக ஓடாததால்,2017 ல் எந்த பட வாய்ப்பும் வரவில்லை.
அந்த வருடத்தில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடவில்லை. தற்பொழுது அவர் ஆதர்வாவுக்கு ஜோடியாக ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நீண்ட நாட்களாக படவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் தற்போது ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.