May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளாக் டீ குடிப்பது நல்லதா? கெட்டதா?

1 min read
Is drinking black tea good? Bad?

பிளாக் டீ குடிப்பது நல்லதா? கெட்டதா?

உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.

நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

சில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.

நன்மைகள்:

  • நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
  • வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
  • மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
  • பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  • பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.
  • பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.
  • பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.
  • ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
  • பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.
  • இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.

தீமைகள்:

  • ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.
  • அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.
  • வெறும் வயிற்றில் பிளாக் டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.