கொடூரனே கொரோனா (புதுக் கவிதை)
1 min read
Puthu Kavithai
கொடுங்கோலன் கொரோனா
மனிதனைக் கொல்லவந்த
கொடூரனே!
கண்ணுக்குத் தெரியாத காலனே!
சீனாவில் சீழ்தெறித்து
உலகமெங்கும் சிதறியவனே!
கண்ணுக்குத் தெரிந்தால்
எங்கள் தெரு சிறு கண்ணனும்
கவுட்டவில்லால் உன்னைக்
கொன்றுவிடுவான்!
ஆனாலும் எங்கள்
விஞ்ஞானம் உன்னை
விரட்டியடிககும், விரைவில்.
மனிதனை கொள்ளைப் பொருளாய்
கொன்று குவித்தாய்
எதிர்ப்பு சக்தி இல்லாதவனிடம்
எதிர்த்து நிற்கிறாய்
அறுபதுக்குமேல் ஆட்கொள்கிறாய்
சங்கடத்துடன் சடலமாக்குகிறாய்
மரணசாவியை அபகரித்தாய்
மனிதனை துக்க மணியுடன் தூங்க வைத்தாய்-நீ
நிரந்தரமாய் தூங்கும் காலம்
நெடுந்தூரம் இல்லை
-டிஸ்கோ செல்வராஜ்.
கடையம்