May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

மருமகளே வா… வா… (சிறுகதை) எழுதியவர்; கடையம் பாலன்

1 min read

Marumaglee vaa vaa- story by Kadayam Balan

மருமகளே வா… வா…
காமாட்சி-சிவநேசன் அந்த வயதான தம்பதியர், வாழ்க்கையில் எல்லா முக்கிய கடமைகளையும் செய்து முடித்து நிம்மதியோடு ஆனந்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் கையில் சமீபத்தில் அவர்கள் நடத்திய திருமண ஆல்பம் இருந்தது. சுதாகர்-சுஜிதா திருமணக் கோலத்தில் மகிழ்ச்சி பொங்க காணப்பட்டனர்.

திருமணத்திற்குவந்த சொந்த பந்தங்களை பற்றியும், அவர்களின் அன்பு, பாசங்கள் பற்றி பேசிக் கொண்டே இருந்தனர். அப்போது அவர்களின் சம்பந்தியின் பெருமையும் புகழ்ந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் ஹாலில் பெல் சத்தம் கேட்டது. துணில் முதுகை லேசாக சாயத்தப்படி இருந்த காமாட்சி கையை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். நில்லுமா நீ எந்திரிக்குமுன்னே விடிஞ்சிடும் என்றபடி

ஈசிச் சேரில் படுத்திருந்த சிவநேயன் எழுந்துச் சென்று கதவை திறந்தார். வெளியே மீனாட்சி-பெருமாள் நின்றிருந்தனர். கையில் பெயரளவுக்குகொண்டு வந்த ஒரு பை. உள்ளே ஏதோ இருப்பதுபோல் தோற்றம்தான். ஆனால் அங்கே பழைய துணிமணிகள் இருந்தன.
வாங்க சம்பந்தி வாங்க…
பதிலுக்குஒன்றும் சொல்லாமல் தட்டுத்தடுமாறி அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர். அருகில் உள்ள சோபா செட்டில் அமர்ந்தனர்.
“என்ன ரெண்டு பேரும் ஒருமாதிரி இருக்கிங்க… உடம்பு ஏதும் சரியில்லயா?”
“நல்லாத்தான் இருக்…” வார்த்தை முழுமையாக முடியும் முன்னே விம்மல்தான் வந்தது.
“என்ன சம்பந்தி எதுவானாலும் சொல்லுங்க… ஆமா.. சுஜியும் சுதாகரும் சவுக்கியமாக இருக்காங்கல்ல…”
“அவங்க சவுக்கியம்தான்…” பெருமாள் சொன்னார்.
அதற்குள் மீனாட்சியின் கண்களில் இருந்து பொலபொலவென் கண்ணீர் வடிந்தது.

‘’சம்பந்தி இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது. அவ அடாவடித்தனம் அளவுக்குமீறி போயிட்டுச்சு’’ என்றாள்.
காமாட்சியும் சிவநேசனனும் சற்று நிலைகுலைந்தார்கள்.
‘’சமாளிச்சி போம்மான்னனு எவ்வளவோ சொன்னேன் ஆனால் கேட்க மாட்டேங்கிறா’’ என்ற பெருமாள் சுஜிக்கு வரவர தெனாவட்டு அதிகமாகத்தான் இருக்கு.
‘’சுஜியா என்ன சொன்னா?’’
‘’நிங்க கொடுக்கிற செல்லம்தான் அவா இப்படி நடந்துக்கறா.. முருங்கைய ஒடிச்சி வள, பிள்ளய அடிச்சி வளன்னு சொல்லுவாங்க.. அவள அடிக்காம வளத்ததாலத்தான் இந்த அளவுக்குவந்துட்டா…’’ ஆவேசமாக பொறிந்து தள்ளினாள் மீனாட்சி.
“அப்படியல்லாம் சொல்லாதிங்க.. கொஞ்சம் நடந்ததை விளக்கமா சொல்லுங்க..” நிதானப்படுத்தினார் சிவநேசன்.


“அவளுக்கு அடிக்கடி கோபம் முக்குலத்தான் வருது. அவ புருசன் கொஞ்சம் நேரம் கழித்து வந்தாலும் ‘எவக்குட போன.. எங்க என் சக்களத்தி?’ அப்படி இப்படின்னனு கன்னா பின்னான்னு பேசறா… பையன் அப்பாவி.”

“அதனால அவங்களுக்குள்ள சண்டை வந்துட்டுதா? நான் வேணுமின்னா சுதாகருட்ட பேசறேன்.”
“இல்லங்க சுதாகர் பொறுமையில தர்மர். அதனால் அவங்களுக்குள்ள ஒரு நாளும் சண்டை வந்ததே கிடையாது.”
‘’அப்படியனா உங்கள ஏதாச்சும் சொன்னாளா?’’
‘’ஒரு காலத்தில் வாய்தான் பேசிச்சு.. அப்புறம் கை பேசியது. இப்போ காலாலேயே பேச ஆரம்பிச்சுட்டா.’’


‘’என்னதாங்க செஞ்சா?’’
‘’கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்

நல்லவளாத்தான் இருந்தா… கொஞ்சம் கொஞ்சமாக குணம் மாறிக்கிட்டே போயிட்டு…’’
“ஒருநாள் அவளுக்கு பிடிக்குமேன்னு கரும்பு வாங்கி வந்தோம்… எனக்குவாய்ப்புண்ணுன்னு தெரிஞ்சே வாங்கிட்டு வந்திங்களான்னு கேட்டு சண்டை போட்டாள்.
மறுநாள் வாய்ப்புண்ணூக்கு நல்லதேன்னு பால்கோவா வங்கிட்டு வந்தேன். இது எனக்காகவா வாங்கினீங்க.. சுதாகருக்காக வாங்கினிங்கன்னனு கத்தினா.’’
“கடந்த வாரம் இன்சூரன்ஸ் பணம் 4 லட்சம் வந்தது. அதில் ஒரு இடம் வாங்கினோம். அதுலத்தான் பிரச்சினையே வந்தது.
“நல்ல சமாச்சாரம்தானே. அதில என்ன பிரச்சினை?”
“அந்த இடத்தை சுதாகர் பேருக்குபதிவு செஞ்சோம். இது தெரிஞ்சதும் ஏன் தன் பேருக்கு எழுதலன்னு சுஜிதா குதியோ குதின்னூ குதிச்சா. எம்மா உம் புருஷன் பேருக்குத் தானே எழுதினோம்னு சொன்னோம். புருசன்னா.. வாயும் வயிரும் வேறதான்னே. என்னை அம்போன்னு விடப்போறீங்களா… அப்பிடி, இப்படின்னு கேட்டா.”

“நீங்க அவா பேருக்கு எழுதி வச்சிருக்கலாமே?”
“என்ன சொன்னீங்க, ஒரு ஆம்ள பேருல எழுதாம, பொட்டக் கழுத பேருலயா எழுதுவாங்க.. அதுவும் இந்த ராட்ஷசி பேர்லயா…?”
“இருந்தாலும்…”
“சுதாகர் பெயர்ல எழுதினால், பின்னால லோன் போட்டு விடுகட்ட வசதியா இருக்குமுன்னுதான் இப்படி செஞ்சோம்.”
“இந்த நியாயத்தை அவளிடம் எடுத்துச் சொன்னீங்களா…”
“அதுக்குத்தான் தலையை விரிச்சுப்போட்டு மீனாட்சிய.. அடிச்சி கிழே தள்ளிட்டா. அப்போ பொட்டச்சி புருஷனூக்கு அடங்கித்தான் போகனும்ன்னு ஒரு வார்த்தை சொல்லிபுட்டா… அவ்வளவுதான் யாரு அடிமை… அப்படி இப்படின்னு அவள காலால மிதிமிதின்ன மிதிச்சுட்டா.”
“முடியாதுப்பா முடியாது. அவள இங்கேயே அனுப்பி வச்சிடுதோம். இனி அவப்பாடு உங்கப்பாடு” என்றூ ஒரு பெரிய கும்பிடு போட்டாள் மீனாட்சி.
அடுத்த நொடியில் இருவரும் விட்டைவிட்டு புறப்பட்டார்கள்.

“சம்பந்தி ஒரு கிளாஸ் காபி கூட குடிக்காம போறீங்களே..”
“குடிச்சாலும் தொண்டைக்கு கீழே இறங்காது,..” என்று சொல்லிக்கொண்டு வெளியேறினார்கள்.
-***
நேற்று நடந்த இந்த சம்பவத்தால் உறைந்துபோன காமாட்சி-சிவநேசன் தம்பதி இன்னும் அதிலிருந்து மீளவில்லை.
அப்போது வாசல் படியில் சுஜி சுட்கேசோடுவந்து நின்றாள். அவர்களை பார்த்ததும் ஓவென்று அழுதாள்.
“காமாட்சியை கட்டிப்பிடித்துக் கொண்டு என்னால அங்க நிம்மதியா வாழமுடியாது. எதுக்கெடுத்தாலும் அந்த கிழடுக்கு ஆமா பாட்டு போடுற எம்புருஷன் கூட இனிமே குடும்பம் நடத்த முடியாது. நான் உங்கக்கூட இங்கேயே இருந்துடறேன். இனிமே என்னை அங்க அனுப்பாதிங்க.”
அவளின் அழுகையை பார்த்தா அவள்மீதுதான் முழுக்க முழுக்க நியாயம் இருப்பதுபோல் தோன்றும்.
சுஜிதாவை தாங்கி அணைத்தபடி இருக்கையில் அமர வைத்தாள் காமாட்சி.
“குடும்பம்ன்னா நாலும் இருக்கத்தான் செய்யும். நீ கொஞ்சம் அனுசரிச்சி போகக்கூடாதா?”
“நான் அனுசரிக்கலாம், ஆனா அவருகிட்டமட்டும்தான். அவரும் நான் சொல்றத கேப்பாரு. அந்த மீனாட்சி கிழவிதான் அவரை ஆட்டிப் படைக்கிறா..”
“அதுக்காக இப்படியா அடிக்கிறது…”
“அடிப்பேன் அப்படிதான் அடிப்பேன். நீங்க அந்த இடத்துல இருந்து பார்த்தா தெரியும்” என்வறள் அழுகையின் சுருதியை அதிகப்படுத்தினாள்.
“இனிமே என்னால அங்க போகமுடியாது. அவரை வேண்டுமானா இங்க வரச்சொல்லுங்க. அவருடன் குடும்பம் நடத்துகிறேன்.”
“வேலைக்காகத்தான் நீங்க அங்க இருக்க வேண்டய கட்டாயம். அது மட்டுமில்ல வயதான உங்க அம்மா அப்பாவுக்கு உறுதுணையா இருக்குமில்ல…”
“மாமா உங்கள மாதிரி அவங்க அமைதியா பேசமாட்டேங்கிறாங்க.. எப்போ பார்த்தாலும் என்னை குறைசொல்லிக்கிட்டே இருக்காங்க.. நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே இப்படிதான். அக்காளுக்கு கொடுக்கிற செல்லம் எனக்குகிடையாது. சரி கல்யாணம் ஆனப்புறம் மாமன்-மாமியாருடன் நிம்மதியாஇருக்கலாமேன்னு நினைச்சா… வேலை அது, இதுன்னு அவங்களோடு இருக்க சொல்றீங்க”

இப்போது மாமாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு விம்மினாள். சுஜிதாவுக்கு பிரஷர் இருப்பதாகவும் அதை இப்போதே கண்ரோல் பண்ணீக்கோங்க என்று கடந்த மாதம் டாக்டர் சொன்ன அறிவுரை சிவநேசனுக்கு நினைவுக்கு வந்தது. “சரிம்மா உன் இஷ்டப்படி நீ இங்கேயே இரு. என்கூடவே கோயிலுக்குவா… யோகா வகுப்புக்குவா…இனி போகவே வேண்டாம்.”

சிவநேசன் இப்படி சொன்னதும் சுஜிதாவின் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சி கரைபுரண்டது.
இறைவழிபாடு.. யோகா… இவையெல்லாம் சுஜிதாவின் மனதை மாற்றும் என்ற நம்பிக்கையில் அவளை பூஜை அறைக்குஅழைத்துச்சென்றார் மாமனார்.
————————–*——-

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.