May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-10(தொடர் கதை/கண்ணம்பி ஆ.ரத்தினம்)

1 min read

MaanaSeega Magal- Novel By Kannambi AA.Rathinam

முதல் இரவு அறையில் நித்யா மன நடுக்கத்துடன் இருந்தாள். அவளுக்கு இது முதல் இரவல்ல. இதற்கு முன் முதல் கணவருடன் அவள் அதைச் சந்தித்துவிட்டாள். அதனால் அவள் உள்ளத்தில் பழைய நினைவுகள் படையெடுத்துத் தாக்கின. முதல் கணவரின் அணுகுமுறைகள் அவள் உள்ளத்தை அசைத்தது. பிரம்மை பிடித்தவள்போல் இருந்தாள். ஏதோ ஒரு துணை கிடைத்தது என்று ஆறுதல் அடைந்த அவள் அறைக்குள் நுழைந்ததும் பேயறைந்தவள் போல் ஆகிவிட்டாள்.
நித்யா முகத்தில் தோன்றிய கலவரம் செல்வனின் மனதில் பதிவானது. அவன் மனதிலும் காதலியின் நினைவு கதிர்களைப் பாய்ச்சியது.
“என்ன நித்யா… ஏதோ நமக்கு இருந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்து வாழலாம் என்று முடிவெடுத்தோம். ஒரே அறைக்குள் புகுந்ததும் இருவர் மனமும் ஏதோ ஒரு உறுத்தலுக்கு ஆளாகிவிட்டது என்பதுதான் உண்மை. உன்னால் பழையதை மறக்க முடியவில்லை. என்னாலும் என் காதல் நினைவுகளை மறக்க முடியவில்லை. அவள் என் மனதில் மேடை போட்டு அமர்ந்துகொண்டாள். அதனாலென்ன இன்று நம்மால் உடலால் சேரமுடியாது. மனத்தால் ஒன்றுசேர்ந்த நம்மை உடலாலும் ஒன்றுசேர்க்கும்” என்று சொல்லி முடித்தான்.
நித்யா கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் சிந்தியது. “உடல் பசிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த உலகில் உங்களைப் போன்றவர்களும் இருப்பதை நினைத்தால் இந்த உலகில் மனித உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது என்று நம்பமுடிகிறது. சில நிறுவனங்களில் அதிகாரிகளின் அறைக்குப் பூ வைத்துக்கொண்டு போனாலே அவர்களின் கண்களில் சபலப் பார்வையைப் பார்க்கலாம். ஆனால் தலை நிறைய பூச்சூடி வாசனையுடன் தனியறையில் இருந்தும் உங்களிடமிருந்து வருகின்ற வார்த்தைகள் உருகச்செய்கிறது. நீங்கள் உயர்ந்த மனிதர். உங்களுக்குப் பணிவிடை செய்ய எனக்கு விதி அமைந்தது பெரிய பாக்கியம்” என்று சொல்லி அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.
“எல்லாம்… என் அம்மாவின் வளர்ப்பு செய்ததுதான் நித்யா. அவர்கள் தனது உடல் பசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எனது வயிற்றுப் பசிக்காக வருந்தி உழைத்தவர்கள். என் மனதில் எந்த நிலைமையிலும் அன்பும் கனிவும்தான் இருக்கவேண்டும் என்று உபதேசம் செய்தவர்கள். வீண் ஆசாபாசங்களால் அவமானப்பட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தவர்கள். அதனால்தான் என்னால் எப்போதும் நல்லதையே நினைக்க முடிந்தது. இல்லையென்றால் இந்தச் சமுதாயத்தில் தாறுமாறாக நடப்பதற்கு எந்தத் திசையில் திரும்பினாலும் தூண்டுதல்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் நிலைக்குப் பெண்களும் காரணமாகிவிடுகிறார்கள். இந்தச் சமுதாயம் யாரையும் அமைதியாக வாழவிடுவதாக இல்லை. ஒருவருக்கு இடையூறு செய்வதில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர, கண்ணியமாக, கனிவாக வாழ்வதற்குச் சிந்திப்பதில்லை. பலர் மனதில் ஈரம், இரக்கம் என்பதே இருப்பதில்லை. பிறருடைய பாதிப்புகளை உணராமல் எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பாதகங்களையே செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் பலர் வெறுப்புக்கும், விரக்திக்கும் ஆளாகி நொந்துபோகிறார்கள். எங்கே சின்ன மாற்றம் கிடைக்கும் என்று அலைகிறார்கள். அப்போது அவர்களுக்குத் தென்படுவது சிற்றின்ப எண்ணங்களே. அந்த வேட்கையில் திரிகின்ற வாலிபர்கள் அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை அனுபவிக்கும் கண்ணோட்டத் தில்தான் அலைகிறார்கள். காக்கி உடை அணியும் பெண் போலீஸ், வெள்ளை உடை அணியும் நர்ஸ், பர்தா அணியும் பெண்கள் இவர்களின் அங்க அசைவுகள் பெரும்பாலும் வாலிபர்களின் மனங்களைச் சிதைப்பதில்லை. அரைகுறையாக ஆடை அணியும் பெண்களின் அங்கங்களை மேய்வதற்கு வாலிபர்கள் தயங்குவதில்லை. வாய்ப்பு கிடைத்தால் அதை விடுவதில்லை.
சில வாலிபர்களும் கவர்ச்சியாகத் தோன்ற நினைக்கும் பெண்களின் நினைப்பில்தான் அவர்களின் இச்சையைத் தணித்துக்கொள்கிறார்களே தவிர… தன்னடக்கமாக இருக்கும் பெண்களிடம் தாறுமாறாக மனதைச் செலுத்துவதில்லை.
உனது தன்னடக்கமும், உன் முகத்தில் பரவியிருக்கும் பழைய நினைவுகளையும் என்னால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது. மனோரீதியான உணர்வுக்கு முதலிடம் கொடுக்கும்போது உடல் ரீதியான உணர்ச்சி முந்திக்கொண்டு நிற்காது. இருவரும் மனோரீதியான உணர்வில் ஆழ்ந்துவிட்டோம். மனம் விட்டுப் பேசிப்பேசி ஈருயிர் ஓருயிர் என்ற உணர்வை அடைந்தபின் ஈருடல் ஓருடல் என்ற உணர்வைப் பெறுவோம்.”
என்று செல்வன் சொல்லி முடித்ததும் கதவு டக் டக் என்று தட்டும் சத்தம் கேட்டது.
கதவைத் திறந்தாள் நித்யா.
முரளியும் சங்கீதாவும் நின்றுகொண்டிருந்தார்கள்.
“என்ன சிவபூஜையில் கரடி வந்தது போல் நினைக்கிறீர்களா? ஒரு பூஜையும் இன்று நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இன்னைக்கு புதன் கிழமை. வெள்ளிக்கிழமை மாலையில் எல்லாரும் கொடைக்கானலுக்கு போகிறோம். வெளியூர் சூழ்நிலைதான். உங்கள் மனநிலையை மாற்றும்” என்றான் முரளி.
“அதெப்படி அவ்வளவு சரியாகப் புரிஞ்சிக்கிட்டீங்க” என்று அடுத்த கேள்வி கேட்டான் செல்வன்.
எல்லாருடைய உடம்பிலேயும் மனிச ரத்தம்தான் ஓடுது. ஆனால் சிலநேரம் மிருகமாகிடுது. அவ்வளவுதான். ஆனால் மிருக உணர்விலிருந்து விழித்துக்கொண்ட யாருமே திரும்ப மிருகமாட்டாங்க. நீங்க ரெண்டுபேரும் பழையதை மறக்குறதுக்குக் கொஞ்ச நாள் போகணும். அப்புறம்தான் பெட்ரூம் தனியாகத் தேவைப்படும். அதுவரை தனிஅறை தேவையில்லை. நம்ம எல்லாருமே ஒரே ஹால்ல படுத்துக்குவோம். அல்லது குழந்தைகள் ரெண்டுபேரையும் படுக்க வச்சி பக்கத்துல ரெண்டுபேரும் படுத்துக்குங்க” என்று சொன்னான் முரளி. அதன்படி முதலிரவு படுக்கையறையில் நான்குபேர் படுத்துக்கொண்டார்கள்.
முரளியும் சங்கீதாவும் தனியறையில ஒரே கட்டிலில் படுத்திருந்தார்கள். கணவனின் பெருந்தன்மை அவளைப் புல்லரிக்க வைத்தது. கணவனின் கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள். அவள் கன்னத்தில் கண்ணீர் தடம் பதிந்தது. அவளது கண்ணீரின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. தனது கனிவான மனமாற்றம் மனைவியின் மனதில் அழுத்தமான பாசத்தை ஊறவைத்துவிட்டது என்று கருதினான்.
என்னை மன்னிச்சிடு சங்கீதா. ஏதோ ஒரு வேகத்துல அப்படி மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்டேன். உன்னுடைய அணுகுமுறையும், வார்த்தைகளும், தங்கை மீது வச்சிருக்கிற பாசமும் என்னை மனிசனா மாத்திருச்சு. இனி அவங்க மனசில இருக்கிற பிசிர் நீங்கணும். அதுக்காக நம்ம ரெண்டுபேரும் மனோதத்துவ மருத்துவராக மாறணும்.
அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க. என்றாள் சங்கீதா.
முதல் அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா? பிள்ளைகள் ரெண்டுபேரையும் ஸ்கூலுக்கு அனுப்பிக்கிட்டு வந்து அவசரமா ரெண்டுபேரும் வெளியே போகவேண்டியிருக்குன்னு சொல்லிக்கிட்டு, ரெண்டுபேரும் ஒரே நேரத்துல பாத்ரூமுக்குள்ள போய் குளிக்கணும். நம்ம பெட் ரூம்ல ஒரு செக்ஸ்புக், ஒரு சிவப்பு முக்கோண கவர் ரெண்டும் அவங்க ரெண்டுபேர் கண்ணிலையும் படும்படி விட்டுட்டு சாயங்காலம்தான் வருவோம்னு சொல்லிக்கிட்டுப் போயிடணும். அது ஏதாவது ஒர்க்கவுட் ஆகுதான்னு நாளை நைட் தெரிந்திடும்.
“சீ…. நம்மளை அசிங்கியமா நினைக்கப் போறாரு
புது மாப்பிள்ளை” என்றாள் சங்கீதா.
“நினைக்கட்டுமே…. அப்படியாவது அவங்க ரெண்டுபேரும் ஒண்ணுசேரட்டுமே” என்றான் முரளி.
சங்கீதா எதுவும் பேசாமல் படுத்திருந்தாள்.
“சரி இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் சிவராத்திரிதான்.” இது முரளியின் வாக்கு.
“அப்படின்னா தூங்காமலே விழிச்சிருக்கப்போறீங்களா” கேட்டாள் சங்கீதா.
“தூக்கம் எப்படி வரும்? நீ என்னைக் கவனிக்க மாட்டேங்கிறியே என்ற தாபத்தில் இவ்வளவு நாளும் கோபமா இருந்தேன். இப்போ பக்கத்தில படுத்திருந்தும் தாபமெல்லாம் காணாம போயிருச்சி. ஏதாவது ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதுக்கு முக்கியத்துவம் கொடுத்தா யாரும் செக்ஸூக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதவங்கதான் செக்ஸ் செக்ஸ்ன்னு அலைவாங்க என்கிறத புரிஞ்சிக்கிட்டேன்” உணர்வு நிலையில் பேசினான் முரளி.
“எனக்கு ஒரு யோசனை தோணுது. இந்த ரூம்ல இருக்கிற
டி வியை அவங்க ரூம்ல கொண்டு வச்சி ஏதாவது ஒரு செக்ஸ் படத்தைப் போட்டுவிட்டா எப்படி?” என்றாள் சங்கீதா.
“படம் போடக்கூடாது. பாட்டு சி.டி. போட்டுவிட்டா ஒர்க்கவுட் ஆகலாம் ஏன்னா அரைகுறை டிரஸ், ஆபாச ஆட்டம் இதெல்லாம் பார்த்தா ஒரு கிளுகிளுப்பு ஏற்படாம இருக்காது. என்றான்.
“சரி உங்களுக்கு இப்ப பக்தி பாட்டு சி. டி. போடவா செக்ஸ் பாட்டு சி. டி போடவா” என்றாள் சங்கீதா.
“செக்ஸ் பாட்டு சி.டி. போட்டா நல்லாதான் இருக்கும். ஆனா…” என்று இழுத்தான்.
“ஆனா என்ன ஆனா… இவ்வளவு நாளும் உங்களை பட்டினி போட்டு தங்கச்சிகிட்ட படுத்திருந்தேன். ரெண்டு பேரையும் ஒண்ணுசேர்த்து வச்சிட்டோம். இனி பசி வந்தா அவங்களே சேர்ந்துக்குவாங்க. உங்க பசியை ஆற்ற வேண்டியது என் கடமை” என்று முரளியைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
விளக்கு அணைக்கப்பட்டது. இருவரும் இன்ப உலகத்திற்குள் நுழைந்தார்கள்.
காலையில் வாண்டுகள் சிரஞ்சீவி, அம்சவேணி இருவரையும் பள்ளிக்கு அனுப்பும் பரபரப்பில் இருந்தார்கள்.
நித்யா வழக்கம்போல் குழந்தைகளைச் குளிப்பாட்டி சீருடைகள் அணிவித்துவிட்டாள்.
நேற்று இரவு முரளியும் சங்கீதாவும் திட்டமிட்டது போல் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.
இருவரும் அவசரமாகக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
நித்யா பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தாள். பாத்ரூம் அருகில் இருக்கும் வாஷ்பேசின் பக்கத்தில் நின்று செல்வன்
பல் விளக்கிக்கொண்டிருந்தான்.
“குளித்துக்கொண்முதல் இரவு அறையில் நித்யா மன நடுக்கத்துடன் இருந்தாள். அவளுக்கு இது முதல் இரவல்ல. இதற்கு முன் முதல் கணவருடன் அவள் அதைச் சந்தித்துவிட்டாள். அதனால் அவள் உள்ளத்தில் பழைய நினைவுகள் படையெடுத்துத் தாக்கின. முதல் கணவரின் அணுகுமுறைகள் அவள் உள்ளத்தை அசைத்தது. பிரம்மை பிடித்தவள்போல் இருந்தாள். ஏதோ ஒரு துணை கிடைத்தது என்று ஆறுதல் அடைந்த அவள் அறைக்குள் நுழைந்ததும் பேயறைந்தவள் போல் ஆகிவிட்டாள்.
நித்யா முகத்தில் தோன்றிய கலவரம் செல்வனின் மனதில் பதிவானது. அவன் மனதிலும் காதலியின் நினைவு கதிர்களைப் பாய்ச்சியது.
“என்ன நித்யா… ஏதோ நமக்கு இருந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்து வாழலாம் என்று முடிவெடுத்தோம். ஒரே அறைக்குள் புகுந்ததும் இருவர் மனமும் ஏதோ ஒரு உறுத்தலுக்கு ஆளாகிவிட்டது என்பதுதான் உண்மை. உன்னால் பழையதை மறக்க முடியவில்லை. என்னாலும் என் காதல் நினைவுகளை மறக்க முடியவில்லை. அவள் என் மனதில் மேடை போட்டு அமர்ந்துகொண்டாள். அதனாலென்ன இன்று நம்மால் உடலால் சேரமுடியாது. மனத்தால் ஒன்றுசேர்ந்த நம்மை உடலாலும் ஒன்றுசேர்க்கும்” என்று சொல்லி முடித்தான்.
நித்யா கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் சிந்தியது. “உடல் பசிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த உலகில் உங்களைப் போன்றவர்களும் இருப்பதை நினைத்தால் இந்த உலகில் மனித உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது என்று நம்பமுடிகிறது. சில நிறுவனங்களில் அதிகாரிகளின் அறைக்குப் பூ வைத்துக்கொண்டு போனாலே அவர்களின் கண்களில் சபலப் பார்வையைப் பார்க்கலாம். ஆனால் தலை நிறைய பூச்சூடி வாசனையுடன் தனியறையில் இருந்தும் உங்களிடமிருந்து வருகின்ற வார்த்தைகள் உருகச்செய்கிறது. நீங்கள் உயர்ந்த மனிதர். உங்களுக்குப் பணிவிடை செய்ய எனக்கு விதி அமைந்தது பெரிய பாக்கியம்” என்று சொல்லி அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.
“எல்லாம்… என் அம்மாவின் வளர்ப்பு செய்ததுதான் நித்யா. அவர்கள் தனது உடல் பசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எனது வயிற்றுப் பசிக்காக வருந்தி உழைத்தவர்கள். என் மனதில் எந்த நிலைமையிலும் அன்பும் கனிவும்தான் இருக்கவேண்டும் என்று உபதேசம் செய்தவர்கள். வீண் ஆசாபாசங்களால் அவமானப்பட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தவர்கள். அதனால்தான் என்னால் எப்போதும் நல்லதையே நினைக்க முடிந்தது. இல்லையென்றால் இந்தச் சமுதாயத்தில் தாறுமாறாக நடப்பதற்கு எந்தத் திசையில் திரும்பினாலும் தூண்டுதல்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் நிலைக்குப் பெண்களும் காரணமாகிவிடுகிறார்கள். இந்தச் சமுதாயம் யாரையும் அமைதியாக வாழவிடுவதாக இல்லை. ஒருவருக்கு இடையூறு செய்வதில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர, கண்ணியமாக, கனிவாக வாழ்வதற்குச் சிந்திப்பதில்லை. பலர் மனதில் ஈரம், இரக்கம் என்பதே இருப்பதில்லை. பிறருடைய பாதிப்புகளை உணராமல் எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பாதகங்களையே செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் பலர் வெறுப்புக்கும், விரக்திக்கும் ஆளாகி நொந்துபோகிறார்கள். எங்கே சின்ன மாற்றம் கிடைக்கும் என்று அலைகிறார்கள். அப்போது அவர்களுக்குத் தென்படுவது சிற்றின்ப எண்ணங்களே. அந்த வேட்கையில் திரிகின்ற வாலிபர்கள் அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை அனுபவிக்கும் கண்ணோட்டத் தில்தான் அலைகிறார்கள். காக்கி உடை அணியும் பெண் போலீஸ், வெள்ளை உடை அணியும் நர்ஸ், பர்தா அணியும் பெண்கள் இவர்களின் அங்க அசைவுகள் பெரும்பாலும் வாலிபர்களின் மனங்களைச் சிதைப்பதில்லை. அரைகுறையாக ஆடை அணியும் பெண்களின் அங்கங்களை மேய்வதற்கு வாலிபர்கள் தயங்குவதில்லை. வாய்ப்பு கிடைத்தால் அதை விடுவதில்லை.
சுயஇன்பம் அனுபவிக்கும் வாலிபர்களும் கவர்ச்சியாகத் தோன்ற நினைக்கும் பெண்களின் நினைப்பில்தான் அவர்களின் இச்சையைத் தணித்துக்கொள்கிறார்களே தவிர… தன்னடக்கமாக இருக்கும் பெண்களிடம் தாறுமாறாக மனதைச் செலுத்துவதில்லை.
உனது தன்னடக்கமும், உன் முகத்தில் பரவியிருக்கும் பழைய நினைவுகளையும் என்னால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது. மனோரீதியான உணர்வுக்கு முதலிடம் கொடுக்கும்போது உடல் ரீதியான உணர்ச்சி முந்திக்கொண்டு நிற்காது. இருவரும் மனோரீதியான உணர்வில் ஆழ்ந்துவிட்டோம். மனம் விட்டுப் பேசிப்பேசி ஈருயிர் ஓருயிர் என்ற உணர்வை அடைந்தபின் ஈருடல் ஓருடல் என்ற உணர்வைப் பெறுவோம்.”
என்று செல்வன் சொல்லி முடித்ததும் கதவு டக் டக் என்று தட்டும் சத்தம் கேட்டது.
கதவைத் திறந்தாள் நித்யா.
முரளியும் சங்கீதாவும் நின்றுகொண்டிருந்தார்கள்.
“என்ன சிவபூஜையில் கரடி வந்தது போல் நினைக்கிறீர்களா? ஒரு பூஜையும் இன்று நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இன்னைக்கு புதன் கிழமை. வெள்ளிக்கிழமை மாலையில் எல்லாரும் கொடைக்கானலுக்கு போகிறோம். வெளியூர் சூழ்நிலைதான். உங்கள் மனநிலையை மாற்றும்” என்றான் முரளி.
“அதெப்படி அவ்வளவு சரியாகப் புரிஞ்சிக்கிட்டீங்க” என்று அடுத்த கேள்வி கேட்டான் செல்வன்.
எல்லாருடைய உடம்பிலேயும் மனிச ரத்தம்தான் ஓடுது. ஆனால் சிலநேரம் மிருகமாகிடுது. அவ்வளவுதான். ஆனால் மிருக உணர்விலிருந்து விழித்துக்கொண்ட யாருமே திரும்ப மிருகமாட்டாங்க. நீங்க ரெண்டுபேரும் பழையதை மறக்குறதுக்குக் கொஞ்ச நாள் போகணும். அப்புறம்தான் பெட்ரூம் தனியாகத் தேவைப்படும். அதுவரை தனிஅறை தேவையில்லை. நம்ம எல்லாருமே ஒரே ஹால்ல படுத்துக்குவோம். அல்லது குழந்தைகள் ரெண்டுபேரையும் படுக்க வச்சி பக்கத்துல ரெண்டுபேரும் படுத்துக்குங்க” என்று சொன்னான் முரளி. அதன்படி முதலிரவு படுக்கையறையில் நான்குபேர் படுத்துக்கொண்டார்கள்.
முரளியும் சங்கீதாவும் தனியறையில ஒரே கட்டிலில் படுத்திருந்தார்கள். கணவனின் பெருந்தன்மை அவளைப் புல்லரிக்க வைத்தது. கணவனின் கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள். அவள் கன்னத்தில் கண்ணீர் தடம் பதிந்தது. அவளது கண்ணீரின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. தனது கனிவான மனமாற்றம் மனைவியின் மனதில் அழுத்தமான பாசத்தை ஊறவைத்துவிட்டது என்று கருதினான்.
என்னை மன்னிச்சிடு சங்கீதா. ஏதோ ஒரு வேகத்துல அப்படி மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்டேன். உன்னுடைய அணுகுமுறையும், வார்த்தைகளும், தங்கை மீது வச்சிருக்கிற பாசமும் என்னை மனிசனா மாத்திருச்சு. இனி அவங்க மனசில இருக்கிற பிசிர் நீங்கணும். அதுக்காக நம்ம ரெண்டுபேரும் மனோதத்துவ மருத்துவராக மாறணும்.
அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க. என்றாள் சங்கீதா.
முதல் அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா? பிள்ளைகள் ரெண்டுபேரையும் ஸ்கூலுக்கு அனுப்பிக்கிட்டு வந்து அவசரமா ரெண்டுபேரும் வெளியே போகவேண்டியிருக்குன்னு சொல்லிக்கிட்டு, ரெண்டுபேரும் ஒரே நேரத்துல பாத்ரூமுக்குள்ள போய் குளிக்கணும். நம்ம பெட் ரூம்ல ஒரு செக்ஸ்புக், ஒரு சிவப்பு முக்கோண கவர் ரெண்டும் அவங்க ரெண்டுபேர் கண்ணிலையும் படும்படி விட்டுட்டு சாயங்காலம்தான் வருவோம்னு சொல்லிக்கிட்டுப் போயிடணும். அது ஏதாவது ஒர்க்கவுட் ஆகுதான்னு நாளை நைட் தெரிந்திடும்.
“சீ…. நம்மளை அசிங்கியமா நினைக்கப் போறாரு
புது மாப்பிள்ளை” என்றாள் சங்கீதா.
“நினைக்கட்டுமே…. அப்படியாவது அவங்க ரெண்டுபேரும் ஒண்ணுசேரட்டுமே” என்றான் முரளி.
சங்கீதா எதுவும் பேசாமல் படுத்திருந்தாள்.
“சரி இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் சிவராத்திரிதான்.” இது முரளியின் வாக்கு.
“அப்படின்னா தூங்காமலே விழிச்சிருக்கப்போறீங்களா” கேட்டாள் சங்கீதா.
“தூக்கம் எப்படி வரும்? நீ என்னைக் கவனிக்க மாட்டேங்கிறியே என்ற தாபத்தில் இவ்வளவு நாளும் கோபமா இருந்தேன். இப்போ பக்கத்தில படுத்திருந்தும் தாபமெல்லாம் காணாம போயிருச்சி. ஏதாவது ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதுக்கு முக்கியத்துவம் கொடுத்தா யாரும் செக்ஸூக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதவங்கதான் செக்ஸ் செக்ஸ்ன்னு அலைவாங்க என்கிறத புரிஞ்சிக்கிட்டேன்” உணர்வு நிலையில் பேசினான் முரளி.
“எனக்கு ஒரு யோசனை தோணுது. இந்த ரூம்ல இருக்கிற
டி வியை அவங்க ரூம்ல கொண்டு வச்சி ஏதாவது ஒரு செக்ஸ் படத்தைப் போட்டுவிட்டா எப்படி?” என்றாள் சங்கீதா.
“படம் போடக்கூடாது. பாட்டு சி.டி. போட்டுவிட்டா ஒர்க்கவுட் ஆகலாம் ஏன்னா அரைகுறை டிரஸ், ஆபாச ஆட்டம் இதெல்லாம் பார்த்தா ஒரு கிளுகிளுப்பு ஏற்படாம இருக்காது. என்றான்.
“சரி உங்களுக்கு இப்ப பக்தி பாட்டு சி. டி. போடவா செக்ஸ் பாட்டு சி. டி போடவா” என்றாள் சங்கீதா.
“செக்ஸ் பாட்டு சி.டி. போட்டா நல்லாதான் இருக்கும். ஆனா…” என்று இழுத்தான்.
“ஆனா என்ன ஆனா… இவ்வளவு நாளும் உங்களை பட்டினி போட்டு தங்கச்சிகிட்ட படுத்திருந்தேன். ரெண்டு பேரையும் ஒண்ணுசேர்த்து வச்சிட்டோம். இனி பசி வந்தா அவங்களே சேர்ந்துக்குவாங்க. உங்க பசியை ஆற்ற வேண்டியது என் கடமை” என்று முரளியைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
விளக்கு அணைக்கப்பட்டது. இருவரும் இன்ப உலகத்திற்குள் நுழைந்தார்கள்.
காலையில் வாண்டுகள் சிரஞ்சீவி, அம்சவேணி இருவரையும் பள்ளிக்கு அனுப்பும் பரபரப்பில் இருந்தார்கள்.
நித்யா வழக்கம்போல் குழந்தைகளைச் குளிப்பாட்டி சீருடைகள் அணிவித்துவிட்டாள்.
நேற்று இரவு முரளியும் சங்கீதாவும் திட்டமிட்டது போல் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.
இருவரும் அவசரமாகக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
நித்யா பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தாள். பாத்ரூம் அருகில் இருக்கும் வாஷ்பேசின் பக்கத்தில் நின்று செல்வன்
பல் விளக்கிக்கொண்டிருந்தான்.
“குளித்துக்கொண்டிருந்தவள் நனைந்த பாவாடையோடு கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடி வந்தாள். உள்ளே பல்லி இருக்கு. பல்லின்னா எனக்குப் பயம். நான் கதவைத் திறந்துபோட்டுகிட்டுதான் குளிப்பேன். பல்லியைப் பார்த்தா அக்காளைக் கூப்பிடுவேன். அக்கா வாஷ்பேசின் பக்கத்துல வந்து உட்கார்ந்திருந்தாதான் நான் குளிப்பேன். அக்கா வெளியே போயிட்டாங்க அதுதான் பயந்து வந்துட்டேன்.”
“சே… சே… பயந்தாங்கொள்ளி. பல்லிக்கு யாராவது பயப்படுவாங்களா? பெரிய எழுத்துப்புலின்னு சொல்றே… சரி நீ கதவைத் திறந்து போட்டுக்கிட்டே குளி. நான் இதுல உட்கார்ந்திருக்கேன். சரியா?” என்றான் செல்வன்.
“எனக்குக் கூச்சமா இருக்கே” என்றாள் நித்யா.
“சரி அப்படின்னா குளிக்காமலே புடவையைக் கட்டிக்க, நான் குளிச்சிக்கிட்டு வர்றேன்.” என்றான் செல்வன்.
“அதெப்படி போட்ட சோப் அப்படியே ஒட்டியிருக்கு” என்று வெட்கம் கலந்து பேசினாள்.
நித்யாவின் பருவச் செழிப்பு செல்வனை சுண்டி இழுத்தது. அப்படியே கட்டி அணைத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
அவன் அவளுக்கு சோப் போட்டான். அவள் அவனுக்கு சோப் போட்டாள்.
இருவரும் இன்ப மழையில் நனைந்தார்கள். டிருந்தவள் நனைந்த பாவாடையோடு கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடி வந்தாள். உள்ளே பல்லி இருக்கு. பல்லின்னா எனக்குப் பயம். நான் கதவைத் திறந்துபோட்டுகிட்டுதான் குளிப்பேன். பல்லியைப் பார்த்தா அக்காளைக் கூப்பிடுவேன். அக்கா வாஷ்பேசின் பக்கத்துல வந்து உட்கார்ந்திருந்தாதான் நான் குளிப்பேன். அக்கா வெளியே போயிட்டாங்க அதுதான் பயந்து வந்துட்டேன்.”
“சே… சே… பயந்தாங்கொள்ளி. பல்லிக்கு யாராவது பயப்படுவாங்களா? பெரிய எழுத்துப்புலின்னு சொல்றே… சரி நீ கதவைத் திறந்து போட்டுக்கிட்டே குளி. நான் இதுல உட்கார்ந்திருக்கேன். சரியா?” என்றான் செல்வன்.
“எனக்குக் கூச்சமா இருக்கே” என்றாள் நித்யா.
“சரி அப்படின்னா குளிக்காமலே புடவையைக் கட்டிக்க, நான் குளிச்சிக்கிட்டு வர்றேன்.” என்றான் செல்வன்.
“அதெப்படி போட்ட சோப் அப்படியே ஒட்டியிருக்கு” என்று வெட்கம் கலந்து பேசினாள்.
நித்யாவின் பருவச் செழிப்பு செல்வனை சுண்டி இழுத்தது. அப்படியே கட்டி அணைத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
அவன் அவளுக்கு சோப் போட்டான். அவள் அவனுக்கு சோப் போட்டாள்.
இருவரும் இன்ப மழையில் நனைந்தார்கள்.

தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The reCAPTCHA verification period has expired. Please reload the page.