May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

பணம் என்றதும் பல்லை காட்டி இழித்த பிரபல நடிகை

1 min read
Famous actress who confessed to charm for money

உலகமே தற்போது பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதால் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளாராம் அந்த பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அந்த நடிகைக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லையாம். அதுமட்டுமல்லாமல் பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என முரண்டு பிடிப்பதால் தயாரிப்பாளர்களும் நடிகைக்கு எந்தவித சலுகையும் தருவதில்லையாம்.

இதனால் நொந்து போன நடிகை பணம் சம்பாதிக்க தற்போது பல தயாரிப்பாளர்களுக்கு நூல் விட்டு வருகிறாராம். காலம் போன காலத்தில் உங்களுக்கு எதுக்கு நடிகை வாய்ப்பு என ஒதுக்கி விட்டார்களாம்.

சரி, பணத்துக்கு என்னடா பண்றது? என யோசித்துக்கொண்டிருந்த நாயகிக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஒரு ஆண்ட்ராய்டு ஆப் நிறுவனமொன்று, எங்கள் ஆப்பை யூஸ் பண்ணி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை போடுங்கள் என அணுகியுள்ளனர்.

மாட்டுனடா என் பம்பர கட்ட மண்டையா என மொத்தமாக அவர்களது தலையில் மிளகாய் அரைக்க முடிவெடுத்து விட்டாராம் நாயகி. அந்த ஆப் பயன்பாட்டிற்கு வந்து தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதை பயன்படுத்துபவர்கள் நடிகர், நடிகைகள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வருகிறார்களாம்.

இந்நிலையில்தான் அந்த வயதான நடிகையை அணுகியுள்ளது அந்த பிரபல நிறுவனம். முதலில் முரண்டு பிடித்த அந்த பிரபல நடிகை பிறகு பணம் அதிகமாக தருகிறோம் என்று கூறியதும் பல்லை இளித்துக்கொண்டு ஓகே செய்து விட்டாராம். அதுமட்டுமல்லாமல் குட்டியான டவுசரை போட்டு அவர் ஆடிய ஆட்டம் பல லைக்குகளை குவித்துவிட்டதாம்.

இனி இதை வைச்சே கல்லா கட்டிவிடலாம் என முடிவெடுத்த நாயகி தொடர்ந்து தன்னுடைய திறமைகளை அதில் காட்டி வருகிறாராம். மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.