May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

பெண் டைரக்டரின் வைரலான ட்வீட்டால் பரபரப்பு

1 min read
Sensationalized by the female director’s viral tweet

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தளபதி 65 படத்திற்கு மட்டும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருகின்றன.

சமீபகாலமாக முருகதாஸ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென சுதா கொங்கரா பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் தனது தளபதி 65 படத்திற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 10 இயக்குனர்களுக்கு மேல் கதை கேட்டு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. அந்த 10 இயக்குனர்களில் ஒருவர் தான் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா தளபதி விஜய்யை பார்த்து கதை கூறியதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் விஜய் கதை பிடிக்கவில்லை என நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து சுதா கொங்கரா டுவிட்டரில் விஜய் பிறந்த நாளன்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என பதிவிட்டிருந்தார்.

இதனைப் பற்றி சுதா கூறுகையில், ட்விட்டர் போன்ற எந்த சமூக வலைதளங்களிலும் தான் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை நானே அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

இதனால் டுவிட்டரில் போலி அக்கவுண்ட் பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்புபவர்களின் மேல் கவனம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளின் பெயரில் போலி கணக்குகள் உலா வருவது ஒன்றும் புதிதில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.