June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

காரை வேகமாக ஓட்டிச்சென்ற 5 வயது சிறுவன்; சொகுசு கார் வாங்கச் செல்வதாக கூறியதால் பரபரப்பு

1 min read

5-year-old boy who drove the car fast; Excited to be offered a luxury car

7-5-2020
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் வேகமாக காரை ஓட்டிச் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் புதிதாக சொகுசு கார் வாங்கச் செல்வதாக கூறி, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தான்.

காரை ஓட்டிச் சென்ற சிறுவன்

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கெண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு கார் வேகமாக சென்றது. அந்த சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் தாறுமாறாக சென்றது.
இதனை கவனித்த போலீசார் அந்தக் காரை நிறுத்த சைகை காட்டினார்கள். ஆனாலும் கார் நிற்கவில்லை.
இதனால் போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று அந்த காரை மடக்கினார்கள்.
அப்போது அந்தக் காரை ஓட்டிச் சென்றது 5 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

சொகுசு கார் வாங்க

போலீசார் அந்த சிறுவனிடம் இது யாருடைய கார்? எதற்காக எங்கே காரை ஓட்டிச் செல்கிறாய்? என்று கேட்டனர்.
அதற்கு சிறுவன் இந்த கார் தனது பெற்றோருடையது என்றான். மேலும் விலை லம்போர்கினி மாடல் காரை வாங்க கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அவன் கூறினான். அந்த சொகுசு காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் கூறினான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த சிறுவனிடம் நடத்திய சோதனையில் அவன் வெறும் 3 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.228 ) மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. லம்போர்கினி மாடல் காரின் விலை 1 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும்.

விளையாட்டுத்தனமாக சிறுவன் செய்த காரியம் தவறானது ஆகும். எனவே சிறுவனின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *