June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊடகத்தினருக்கு விசா பிரச்சினை: அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

1 min read
Seithi Saral featured Image


Visa issue for media: China denounces US

12-5-2020

சீன ஊடகத்தினருக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதற்கு, தவறை உடனடியாக சரிசெய்யவில்லை எனில் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா-சீனா

கொரோனா வைரஸ் பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டு வந்தது. நேற்று (மே 11) முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எதிர் நடவடிக்கை

 அமெரிக்கா, சீன ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை அதிகரிக்கிறது. நாங்கள் இதனை உறுதியாக எதிர்க்கிறோம்.

அமெரிக்கா தனது தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோருகிறோம். இல்லையெனில் எதிர் நடவடிக்கைகளை சீனா எடுப்பதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு நாட்டு ஊடகவியலாளர்கள் இடையேயான பிரச்னைகள் சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில், அமெரிக்க செய்தித்தாள் நிறுவனத்தில் இருந்து மூன்று அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *