சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கத்தில்தான் கொரோனா அதிகம்
1 min read
Corona is most prevalent in Raipur, Dandayarpet and Kodambakkam in Chennai
25-5-2020
சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது.
சென்னையில்…
தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் நிலவரப்படி புதிதாக 765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சென்னையில் மட்டும் 587 பேர் உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 77 பேர் இறந்துள்ளனர்.
மண்டலம் வாரியாக…
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இதுவரை 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
நேற்றயை பாதிப்புகள் குறித்து மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில், நேற்று அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 70 பேரும், கோடம்பாக்கத்தில் 69 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தேனாம்பேட்டையில் 64 பேரும், திரு.வி.க.நகரில் 55 பேரும், அடையாறில் 46 பேரும், அண்ணாநகரில் 38 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், திருவொற்றியூரில் 26 பேரும், வளசரவாக்கத்தில் 24 பேரும், மாதவரத்தில் 10 பேரும், பெருங்குடியில் 16 பேரும், மணலியில் 16 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.