June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் கோவில் யானைத் தாக்கி பாகன் சாவு

1 min read

Elephant killed in Bagan Thiruparankundram temple

24-5-2020

திருப்பரங்குன்றம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது. அந்த யானைத் தாக்கி பாகன் இறந்தார்.

கோவில் யானை

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான பெண் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு தெய்வானை என்று பெயர்.
இந்த யானையை பாகன் காளிதாசன்,ராஜேஷ் ஆகிய இருவர் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கோவில் யானையை குளிக்க வைக்க அழைத்துச் சென்ற போது திடீரென மதம் பிடித்தது.

கொன்றது

மதம் பிடித்த யானை பாகன் காளிதாசை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பாகனான ராஜேஷ் யானையை கட்டுப்படுத்தி கட்டி வைத்தார். யானை தாக்கி பாகன் உயிரிழந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *