பாலியல் தொல்லையால் சினிமாவைவிட்டு ஓடிய நடிகை கல்யாணி
1 min readActress Kalyani fled the cinema due to sexual harassment
31-5-2020
பாலியல் தொல்லை காரணமாகவே சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிக் கொண்டேன் என்று நடிகை கல்யாணி கூறினார்.
நடிகை கல்யாணி
ரமணா, ஜெயம் உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. இவர் 1990-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி பிறந்தார். இவர் வாலிப பருவத்தை அடைந்ததும் பூர்ணிதா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு கதாநாயகியாக நடித்தார். இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்பட மொத்தம் 10 படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார்.
அதன்பின் சினிமாவில் இருந்த டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்துவந்தார். இதன் மூலம் டெலிவிஷன் தொடர்களிலம் நடித்தார். பிரிவோம் சந்திப்போம், அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் என பல்வேறு டெலிவிஷன் தொடர்களில் நடித்தார்.
திருமணம்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2013-ம் ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு 2018-ம் ஆண்ட ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவருக்கு 2018ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் நவ்யா.
இந்த நிலையில் சினிமாவில் இருந்து தான் விலகியது பற்றி பரபரப்பு தகவலை கல்யாணி வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதாநாயகியாக நடத்திய பின்னர்தான் பிரச்சினைகள் தலைதூக்கியது. என் அம்மாதான் எனக்குரிய போனை எடுத்து பேசுவார். அப்போது சில பெரிய நடிகர் மற்றும் பெரிய தயாரிப்பாளர் போனில் வந்தனர். அவர்கள் என் அம்மாவிடம் உங்கள் மகள்தான் ஹீரோயின். ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்ன்னு சொல்லுவாங்க. அதை எங்க அம்மா முதல்ல தப்பா நினைக்கல. கால்ஷீட்டத்தான் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றாங்கன்னு நினைச்சாங்க. அதுக்குப்பிறகுதான் அது தவறான வார்த்தை என்பது என் அம்மாவுக்கு புரிந்தது. அதன்பின் அந்த வார்த்தையை கேட்டாலே போனை கட் செய்துவிடுவார்.
பாலியில் தொல்லை காரணமாகவே நான் சினிமாவில் இருந்து முழுமையா விலகினேன். அதன்பின் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போது உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒருவர் என்னை இரவு பப்புக்கு அழைத்தார். நான் காபி ஷாப்பில் சந்திக்கலாமே என்றேன் . அதன்பின் என்னை எந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை. இதனால்தான் டெலிவிஷனில் இருந்தும் விலகிவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.
இவ்வாறு நடிகை கல்யாணி கூறினார்.