11வது முறையாக கர்ப்பமான பெண்ணுக்கு கருக்கலைப்பு -செவிலியர் மீது வழக்கு
1 min read
6.6.2020
Abortion for a pregnant woman -The case against the retired nurseகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி சிவலட்சுமி (36). இவருக்கு ஏற்கனவே 9 மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு உடலில் போதிய சத்து இல்லாத காரணத்தால் அப்போது குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சிவலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து 5ம் தேதி சிவலட்சுமி திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பகுதிக்கு சென்று ஓய்வுபெற்ற செவிலியர் ராஜாமணியிடம்(69) சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் சிவகாமியின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிவலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் சுகாதார இணை இயக்குனர் சமுத்திரகனி, மருத்துவர் ராஜ்குமார், திருக்கோவிலூர் அரசு மருத்துவர் ராஜவிநாயகம் ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜாமணியின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அவர் பயன்படுத்திய மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து, கருக்கலைப்பு செய்த வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் ராஜாமணி மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.