படிப்புக்கு வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு பழங்கி மாணவிக்கு முதல்வர் பாராட்டு
1 min read
he Chief Minister congratulates the girl who used to study for Rs.5 lakhs
6-5-2020
தனது படிப்புக்கு வைத்திருந்த ரூ.5 லட்த்தை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு வழங்கிய மதுரை மாணவியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். மேலும் அவரது படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.
மாணவி நேத்ரா
மதுரை மேலமடையைச் சேர்ந்தவர் மோகன். அந்தப்பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மகன் நேத்ரா.
மோகன் தன் மகளின் படிப்புக்காகவும், எதிர்கால வாழ்வுக்காகவும் ரூ.5 லட்சம் சோத்து வைத்திருந்தார். தற்போது கொரோனா ஊரடங்களால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தனக்காக வைத்துள்ள ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று நேத்ரா தன் தந்தையிடம் கூறினார். அவருக்கு முதலில் விருப்பம் இல்லை. ஆனால் விடாப்படியாக நேத்தரா இருந்ததால் ரூ.5 லட்சத்துக்கு அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள் வாங்கி அந்த பகுதி மக்களுக்கு வழங்கினார்.
நல்லெண்ண தூதர்
இதனை பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில், பாராட்டினார்.
இதை தொடர்ந்து, நேரத்திராவை ஐ.நா.வின் நல்லெண்ண துாதராக அறிவித்து, அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி பாராட்டு
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பாழனிசாமி இன்று( சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நேத்ராவுக்கு எனது வாழ்த்து. அனைத்து வகையிலும், சிறந்து விளங்கி தமிழ்நாடு, இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அவரது உயர்கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.