June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா ஊரடங்கில் ஓடிஒடி உழைத்த ஜெ.அன்பழகன் மரணம்

1 min read
DMK MLA J.Anbalagan passes away, who fled the Corona Curfew

10-6-2020
தி.மு.க. எம்.எல்.ஏ. வான ஜெ. அன்பழகன் கொரோனால் பாதிக்கப்பட்டு இன்று காலை இறந்தார். கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்காக ஓடிஓடி உழைத்தவர் நிரந்தர ஓய்வுக்கு சென்றுவிட்டார்.

ஜெ. அன்பழகன்

சென்னை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்து வந்தவர் ஜெ.அன்பழகன். இவர் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர் கட்சிப்பணியில் திறம்பட செயல்படுபவர். கொரோனா ஊரடங்கு காலத்தில், தி.மு.க.வின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2-ந் தேதி, காய்ச்சல் வந்தது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அபபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஆனால் அதன் பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் அண்ட் மெடிகல் சென்டரில் சேர்க்கப்பட்டார்.

மே 3-ந் தேதி அவருக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 90 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது, இரண்டு நாட்களுக்குப் பிறகு அது 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதன்பிறகு அவரது உடல் நிலை சிறிது முன்னேற்றம் அடைந்ததால் வென்டிலேட்டர் அகற்றப்பட்டது.

கடந்த, திங்கட்கிழமை மாலை முதல் அவரது உடல்நலம் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவருடைய ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதோடு இதய செயல்பாடுகளும் மோசமடையத் தொடங்கியதாக கூறப்பட்டது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர். தற்போது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அவரை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

மரணம்

இந்த நிலையல்தான் இன்று காலை 8.05 மணிக்கு ஜெ.அன்பழகன் இறந்தார். அவருக்கு வயது 62.
இவரது தந்தை பழக்கடை ஜெயராமன் தி.மு.க.வில் தீவிர பற்று கொண்டனர். இவர் தனது மகன்களுக்கு கருணாநிதி , அன்பழகன் என்று பெயர்சூட்டினார். இதில் அன்பழகன்தான் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு மனைவி, ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். இவரது வீடு சென்னை தி.நகரில் உள்ளது.
கடந்த கடந்த மூன்று எம்.எல்..ஏ.வாக இருந்துவந்தார். தற்போது சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெ.அன்பழகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது. கடந்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனை டாக்டரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரித்தார்.

ஓடி ஓடி உழைத்தவர்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ததில் ஜெ. அன்பழகனை மிஞ்சியவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது உழைப்பு இருந்தது. கட்சி பாகுபாடின்றி எழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
அவர் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு வெளியே வராமல் இருந்திருக்கலாமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருந்தது அவரது உழைப்பு.
இந்த நிலையில் மற்ற சமூக நல சேவகர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து உதவி செய்ய வேண்டும். தகுந்த பாதுகாப்புதேவை என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *