July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்காக சாகத் துணிந்த ரசிகர்

1 min read
Actress Aishwarya Rajase' Serious fan

12-6-2020

நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்காக ஒரு ரசிகர் சாகத்தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை, தர்மதுரை, எங்கவீட்டுபிள்ளை உள்பட பல படங்களில் நடித்துளார். இவர் நல்ல கதை அம்சங்களை தேர்வு செய்து நடிப்பதால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரது நடித்த “க/பெ ரணசிங்கம்” என்ற
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதை ஏராளமான ரசிகர்கள் பார்த்து லைக் மற்றும் கமண்ட் கொடுத்துள்ளனர்.

சாகத் தயார்

ஒரு ரசிகர் கொடுத்த கமெண்ட்டில், “நான் உங்களுடைய தீவிர ரசிகன். நான். உங்களுக்காக நான் சாகத் தயார்” என்று கூறியிருக்கிறார்.

இதனைப் பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி அடைந்தார். அந்த ரசிகருக்கு பதில் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், “உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பராக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்” என்று ஏழுதியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *