June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

2 போலீசாருக்கு கொரோனா அறிகுறி; ஆலங்குளம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது

1 min read
2 Corona sign to police; Alangulam police station closed

25-6-2020

இரண்டு போலீசாருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து ஆலங்குளம் போலீஸ் நிலையம் பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

போலீசாருக்கு கொரோனா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்., ஏட்டு ஆகியோருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூட்டப்பட்டது

இதனையடுத்து ஆலங்குளம் போலீஸ் நிலையம் பூட்டப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டது.

மேலும் போலீஸ் குடியிருப்பு, தென்காசி கீழமுத்தாரம்மன்கோவில் தெரு, வீரகேரளம்புதூர் அம்பலாவாபுரம் மேற்கு தெரு ஆகிய பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த ஒருவர் (வயது 36) வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *