June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

1 min read

nellai Iruttu kadai alwa ower sucide

25-6-2020
நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை அல்வா

திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும். வெளியூர்களில் அதே பக்குவத்தில் செய்தாலும் அந்த ருசி இல்லை என்று கூறுவார்கள். அதற்கு நெல்லை தண்ணீர்தான் காரணம் என்றும் சொல்வார்கள்

நெல்லை ஜங்சன் பஸ் நிலையம் அருகே சாந்தி ஸ்சுவீட் ஸ்டாலில் அல்வா வாங்க பொதுமக்கள் திரண்டு நிற்பார்கள். சிலருக்கு அந்த அல்வாவை விட அருகே உள்ள லட்சுமி விலாஸ் கடை அல்வாதான் பிடிக்கும் என்பார்கள்.
அதே நேரம் நெல்லை இருட்டுக்கடை அல்வாவுக்கும் தனி சிறப்பு உண்டு என்றும் கூறுவார்கள்.
இந்தக் கடை நெல்லையப்பர் கோவில் சன்னிதான தெருவில் உள்ளது. மாலையில் மட்டு்ம் திறந்திருக்கும். அங்கு அல்வா வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பார்கள். சிறிது நேரத்தில் அல்வா விற்றுவிடும்.

தற்கொலை

இந்த இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் உரிமையாளர்களில் ஒருவரான ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்ததாகவும் மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *