May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 18,552 பேருக்கு கொரோனா

1 min read

18,552 people affected for Corona in India one day

17-6-2020

இந்தியாவில் ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

18,552 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது.
கொரோனா பரவல் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகர் தினமும் காலையில் அறிவித்து வருகிறது.
அதன்படி இன்று காலை அறிவித்த தகவல் வருமாறு:-

இந்தியாவில் நேற்று( வெள்ளிக்கிழமை) ஒரே நாளில்18 ஆயிரத்து, 552 பேரிருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து, 95 ஆயிரத்து 881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

384 பேர் சாவு

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 384 பேர் கொரோனாவுகு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,685 ஆக உயர்ந்துள்ளது.

மாநில வாரியாக

இந்தியாவல் கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 1 லட்சத்து, 52 ஆயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 106 பேர் இறந்துள்ளனர்.
2-வது இடத்தல் டெல்லி உள்ளது. அந்த மாநிலத்தில் 77 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 492 பேர் இறந்துள்ளனர்.
3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 74 ஆயிரத்து 240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 957 பேர் இறந்து உள்ளனர்.
இதனை அடுத்து குஜராத்தில் 30 ஆயிரத்து 095 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் 1 ஆயிரத்து 771 பேர் இறந்து இருக்கிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 943 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 630 பேர் மரணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 380 பேர் இறந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் 16 ஆயிரத்து, 190 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 616 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் 12 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 211 பேர் மரணமடைந்துள்ளனர்.

மற்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அடைப்பு குறிக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கையும் வருமாறு:-
மத்திய பிரதேசம் 12,798 ( 546)

தெலுங்கா 12, 349 ( 237)
ஆந்திரா 11, 489 (148)
கர்நாடகம் 11,005 ( 180 )
பீகார் 8,716 ( 58)
காஷ்மீர் 6,762 (91 )

அசாம் 6,607 ( 9 )
ஒடிசா 6,180 ( 17)
பஞ்சாப் 4,957(122)
கேரளா 3,876( 22)
உத்தரகாண்ட் 2,275 ( 37)
சத்தீஸ்கர் 2,545 ( 13)
ஜார்கண்ட் 2,290 ( 12 )
திரிபுரா 1, 325( 1 )
மணிப்பூர் 1,075 (0)
கோவா 1,039( 2)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.