June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கான சித்த மருந்தை ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

1 min read
Madurai High cour orders to investigate paranoia for corona

கொரோனாவுக்கான சித்த மருந்தை ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

7-7-2020

கொரோனாவுக்காக சித்த மருத்துவர் கண்டுபிடித்த ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.

சித்த மருத்துவர்

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் கொரோனாக்கு முடகத்தான் இலை , வெட்டி வேர் உள்பட 66 மூலிகைகளை கொண்டு இம்ப்ரோ மருந்து தயாரித்துள்ளேன் என்றும் அதை ஆய்வு செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ந்து ஆகஸ்டு மாதம் 3-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். மேலும் மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

போதுமான நிதி

மேலும், இந்திய பாரம்பரிய மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *