June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கல்லூரி மாணவர்களுக்கான தேர்வை செப்டம்பர் இறுதிக்குள் நடத்த யு.ஜி.சி. பரிந்துரை

1 min read
UGC will conduct the exams for college students by the end of September. Recommend

7-7-2020
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு இறுதி பருவத்தேர்வுகளை வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.

கல்லூரி தேர்வுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. இறுதித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருவதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டு பருவத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

செப்டம்பர் இறுதிக்குள்

இதையடுத்து, நாடு முழுவதும் தள்ளிவைக்கப்பட்டுள்ள கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி பருவத்தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பரிந்துரை வழங்கியுள்ளது. தேர்வுகள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ நடந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தவிர்க்கமுடியாத காரணங்களால் தேர்வு எழுத முடியாத இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு நடப்பாண்டு தேர்வுகளுக்கு
மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *