June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 37,724 பேருக்கு கொரோனா 648 பேர் சாவு

1 min read

All over India 37.724 person affected for corona and death 648 one day

22-7-2020

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 37,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 648 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

37,724 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் நேற்று(செவ்வாய்க் கிழமை)) ஒரே நாளில், 37,724  பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 11,92,915 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 648 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  28,732 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 7,53, 050 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,11,133 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை )மட்டும், 3,33,395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,43,81,303 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் வாரியாக…

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் 3,27,031 ( 12,276)

தமிழ்நாடு 1,80,643 ( 2,626)

டெல்லி 1,25,096 ( 3,690)

கர்நாடகம் 71,069 (1,464)

குஜராத் 50,379 ( 2,196)

உத்தரபிரதேசம் 53,288 (1,229)

தெலுங்கானா 47,705 (429)

ஆந்திரா 58,668 (758)

மேற்குவங்காளம் 47,030 (1,182)

ராஜஸ்தான் 31.373 (577)

அரியானா 27,462 (364)

மத்திய பிரதேசம் 24,095 (756)

பீகார் 28,952 (217)

அசாம் 25,382 (58)

ஒடிசா 18,757 (103)

காஷ்மீர் 15,258 ( 263)

பஞ்சாப் 10,889 ( 263)

கேரளா 13,9944 (44)

சதீஷ்கர் 5,729 (29)

உத்ரகாண்ட் 4,849 (55)

ஜார்க்கண்ட் 6,159 (55)

கோவா 4,027 (26)

 திரிபுரா 3,331 (8)

புதுச்சேரி 2,179 (30) மணிப்பூர் 2,015 (0)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *