June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டுத்திருவிழா; பக்தர்கள் எதிர்பார்ப்பு

1 min read
Will permission be granted to hold the Karkuvel Ayyanar Temple Festival?

22-7-2020

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரமும், கார்த்திகை மாதம் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி முதல் அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பங்குனி உத்திரத்தன்று அய்யனாரை பக்தர்கள் தரிசிக்கமுடியவில்லை.

இருப்பினும் மூலவரான கற்குவேல் அய்யனாருக்கு எப்பொழுதும் போல மூன்று கால பூஜைகளை, முறை பூசாரிகள் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டு கள்ளர் வெட்டுத்திருவிழா நடக்கவேண்டிய கார்த்திகை மாதத்திற்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரவேண்டும். திருவிழா தங்கு தடையின்றி நடைபெறவேண்டும் என்று, குலதெய்வமாம் கற்குவேல் அய்யனாரின் தரிசனத்திற்காக மக்கள் ஆவலுடனும் பெரிய எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.

—-அய்யம்பிள்ளை, தேரிக்குடியிருப்பு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *