June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

1 min read


Police sub-inspector commits suicide by shooting in Chennai

27-7-2020
சென்னை தியாகராய நகரில் ஆயுதப்படை சப்-இஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செய்து கொண்டார்.

சப்-இன்ஸ்பெக்டர்

சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர்(வயது 47). சென்னை ஆயுதப்படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். அவர் சென்னை தி.நகர் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இன்று(திங்கட்கிழமை மாலை அதே அலுவலகத்தில் பணியிலிருந்த அவர் திடீரென தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதில் வங்கியில் தான் பெற்றிருந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்கொலை செய்த சேபர் வேலூர், காட்பாடியைச் சேர்ந்தவர். 1994-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவர் சப்-இன்ஸ்பெக்டரானார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்கிற மனைவியும், 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *