May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாயில் ஒரே நாளில் 57,118 பேருக்கு கொரோனா; 764 பேர் சாவு

1 min read

Over all Inda 57.118 person affected for corona and death 764 one day

1-8-2020
இந்தியாவில் ஒரே நாளல் 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 764 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.அதன்படி இன்று(சினிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இன்று காலை காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 57,118 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனாவுக்கு 764 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 10,94,374 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 5,65,103 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.