June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடி ஐஸ்வர்யாராய்?

1 min read

Aishwaryrai Jodi to Prabhu in Ponniyin Selvan

27-8-2020

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ராஜராஜசோழன் வேடத்தில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் பிரபுவே நடிப்பார் என்றும் சரத்குமாருக்கு வேறு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்

கதையின்படி பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி என்ற கேரக்டர் இருக்கும். அப்படியானால் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்ற தகவல் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

==

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *