May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

டாப்சி படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி

1 min read

Vijay Sethupathi in the title role in the movie Topsy

30-8-2020

டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை டாப்சி

நடிகை டாப்சி தற்போது முன்னணி நடிகையாக விளங்குகிறார். இவர் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர். இதனை அடுத்து காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கையை விளக்கும் கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி

சமீபத்தில் டாப்சி நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை நடிகை டாப்சி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் டாப்சி கூறியதாவது:-
விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நான் இணைந்து நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். நான் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் பிடிவாதமாக இருக்கிறார். கதையும் எனக்கு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படம். எனவே ஒரேகட்டமாக 28 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு டாப்சி கூறியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.