May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

3 ஆண்டுகளாக கர்ப்பமாக இருக்கும் சமந்தா!

1 min read

Samantha is 3 years pregnant!

30-8-2020
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் கோலிவுட், டோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுபவர்.
இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கர்ப்பம்

அப்படி உரையாடும் போது அவரிடம் பெரும்பாலான ரசிகர்கள் உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்றுதான் கேள்வி கேட்கிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, தற்போது வித்தியாசமாக அதேநேரம் நகைச்சுவையாக பதில் அளித்து வருகிறார்.
நீங்கள் எப்போது குழந்தை பெறுவீர்கள் என்ற கேள்விக்கு “ஆமாம் நான் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கர்ப்பமாக தான் உள்ளேன். ஏனோ தெரியவில்லை இந்த குழந்தை வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.