June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் காலம்- நேரம் அறிவிப்பு

1 min read

Date and Time announcement of Metro Rail operation in Chennai

3-8-2020
சென்னையில் மெட்ரோ ரெயில் என்று முதல் எந்த நேரத்தில் இயக்கப்படும் என்று தமிழ அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில்

இந்தியா முழுவதும் ரெட்ரோ ரெயிலை இயக்க சில நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் கூறப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் சென்னை மெட்ரோல் ரெயில் இயக்கம் பற்றி தமிழக அரச சிலவழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

7, 9- ந் தேதிகள்…

*சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஓடும்
*விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் 7 ம் தேதி துவங்கும்
*பரங்கிமலை – சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை செப்.9 -ந் தேதி துவங்கும்

  • லிப்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே அனுமதி
  • பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம்.
    *ரெயில் இருக்கைகளில் பயணிகள் ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர வேண்டும்.
    *காற்றோட்டத்திற்காக ஒவ்வொரு நிலையத்திலும் 20 விநாடிகளுக்கு பதிலாக 50 விநாடிகள் மெட்ரோ ரயில்கள் நிற்கும்

5 நிமிட இடைவெளி

  • அலுவலக நேரமான காலை 8:30- 10:30, மாலை 5:00 – 8:00 வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
    *அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
    *ஸ்மார்ட் கார்டு மற்றும் கியூஆர் ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும்
    *தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *