சங்கரன் கோவில் அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண்குழந்தை எரிப்பு
1 min read
Burning of a 4-day-old male born near Sankarankoil
சங்கரன் கோவில் அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண்குழந்தை எரிப்பு
9-9-2020
சங்கரன்கோவில் அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீவைத்து எரிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
எரிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு தனியார் தியேட்டர் அருகே உள்ள வளாகத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏதோ தீ எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஒரு பச்சிளம் குழந்தை தீயில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து போலீசார் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அப்போது அரைகுறையாக எரிந்து கொண்டிருந்தது ஆண் குழந்தை என்றும் அது பிறந்து 4 நாட்களே ஆனது என்றும் தெரிய வந்தது.
இந்த குழந்தை யாருடையது? எதற்காக தீ வைத்து எரித்தனர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.