June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவசேனாவுவை எதிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய மந்திரி சந்தித்தார்

1 min read

The Union Minister met actress Kangana Ranaut, who opposes the Shiv Sena

10-9-2020

மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியை எதிர்க்கும் இந்தி நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே சந்தித்து பேசினார்.

கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறப்பட்டதைத் தொடாந்து இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி கருத்து சொன்ன இந்தி நடிகை கங்கனா ரனாவத் ” நடிகர் சுஷாந்த் சிங் சாவுக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள சினிமா மாபியாக்களும், போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தான் காரணம். இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

இதனால் நடிகை கங்கனா ரனாவத் மராட்டிய மாநில ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிரானார். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , ” கங்கனா, இனி மும்பைக்கு வர வேண்டாம்’ என்று எச்சரிக்கும் விதத்தில் கூறினார்.

பாகாப்பு

இதற்கு கங்கனா ரனாவத்தும் கடுமையாக விமர்சித்தார். “மும்பை நகரம், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது. இங்குள்ள ஆட்சியாளர்கள், தலிபான் பயங்கரவாதிகள் போல் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்” என்றார்.

மராட்டிய மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மும்பை போலீசார், மக்களை பாதுகாப்பதற்காக பல தியாகங்களை செய்துள்ளனர். ஆனால், நடிகை கங்கனா பொறுப்பின்றி பேசுகிறார். இனிமேல், மும்பையில் வசிப்பதற்கு, அவருக்கு தகுதியில்லை. அவர் மும்பைக்கு வர வேண்டாம்.” என்றார்.
அதற்கு கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் நான் 9-ந் தேதி மும்பைக்கு கண்டிப்பாக வருவேன் என்று சவால் விட்டார்.
இந்த நிலையில் கங்கனாவுக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி நடிகைக்கு ஒரு தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் 11 ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

கட்டிடம் இடிப்பு

அந்த பாதுகாப்புடன் அவர் 9-ந் தேதி மும்பை வந்தார். அவருக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மும்பை பாந்திராவில் கங்கனாவிற்கு சொந்தமான கட்டிடங்களை மும்பை மாநகராட்சி விதி மீறல் என கூறி நேற்று இடித்து தள்ளியது. அந்த இடத்தை கங்கனா ரனாவத் பார்வையிட்டார். கட்டிடம் இடிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தள்ளார்.

மத்திய மந்திரி சந்திப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று(வியாழக்கிழமை மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே , நடிகை கங்கனா ரணாவத்தை சந்தித்து பேசினார்.

நடிகை கங்கானாவின் பேச்சு இப்போது பெரும் அரசியலாக்கப்பட்டு விட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *