August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

குலாம் நபி ஆசாத் உள்பட 4 பேர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கம்

1 min read

Four people, including Ghulam Nabi Azad, were removed from Congress charge

11-9-2020

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்கள் பதவியில் இருந்து குலாம்நபி ஆசாத், அம்பிகாசோனி, மல்லிகாஜுனா கார்கே, மோதிலால்வோரா ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளார்.

குலாம் நபி ஆசாத்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருப்பர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பிவர். இது தொடர்பாக இவர் உள்பட 23 பேர் கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார்கள்.

நீக்கம்

இதனையடுத்து குலாம்நபி ஆசாத், அம்பிகாசோனி, மல்லிகாஜுனா கார்கே, மோதிலால்வோரா ஆகியோர் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து காரிய கமிட்டி உறுப்பினர்களாக ராகுல், பிரியங்கா, மாணிக்கம் தாகூர் , செல்லக்குமார், சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பாளர்கள்

தமிழகத்திற்கான மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மத்திய பிரதேச மாநிலத்திற்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக திணேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக பாண்டிச்சேரி, கோவா மாநில பொறுப்பாளராகவும் இருப்பார்.

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பொறுப்பாளராக செல்லக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு குழு அமைப்பு

காங்கிரஸ் தலைவருக்கு உதவும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏ.கே. அந்தோணி, அகமது படேல், அம்பிகாசோனி, கே.சி.வேணுகோபால், முகுல்வாஸ்னிக், ரந்தீ்ப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கண்ட தகவலை காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *