கண்கண்ட கர்ணன் சிவாஜி கணேசன்
1 min readSivaji Ganesan same as Karnan
கொடைக்கு சிறந்தவன் கர்ணன்.அந்த கர்ணனான சினிமாவில் நடித்தவர் சிவாஜி கணேசன். அவர் கர்ணனாக நடித்து கண்கண்ட கர்ணனாக வாழ்ந்தவர் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். கர்ணனின் கொடைத் தன்மையையும் வீரத்தையும் மறைக்க எத்தனையோ சதிகள் நடந்தன.
அதேபோல் சிவாஜி கணேசன் செய்த சேவைகள் எல்லாம் மறைக்கப்பட்டன. சிவாஜி தான் செய்ததை பறைசாற்ற விரும்பவில்லை. தேவைக்கு கொடுப்பதை விளம்பர படுத்துபவன் கொடையாளி அல்ல. தற் புகழலாளி . ஆனால் சிவாஜி கணசேன் தான் கொடுத்ததை அடுத்த நொடியே மறந்துவிடுவார்.
கர்ணன் மீது அர்ஜுனன் எப்போதும் பகை பாராட்டுவான். கர்ணன் கொடை வள்ளல் என்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியிவில்லை. அவனது பொறாமை குணத்தை அறிந்த கண்ணபிரான் அர்ஜுனனுக்கு பாடம் புகட்ட நினைத்தான்.
மலைபோல் இரண்டு தங்க குவியலகளை கண்டன் உருவாக்கினார். பின்னர் அர்ஜுனனையும், கர்ணனையும் அழைத்து இவற்றை யார் முதலில் தானம் செய்கிறீர்கள் என்பதுதான் போட்டி என்றார். அர்ஜுன் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வருவோர் போவோருக்கெல்லாம் தாராளமாக அள்ளி அள்ளி கொத்தான். தங்க குவியல் குறையவில்லை. கர்ணன் தன்தங்க குவியல் அருகே நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வறியவன் ஒருவன் வந்தான். அவனிடம் கர்ணன், இந்த தங்க குவியலை நீயே எடுத்துக் கொள் என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான்.
ஒரு நொடியில் மலைபோல் குவிந்திருந்த தங்கத்தை தானமாக வழங்கிவிட்டான். கர்ணன் . அர்ஜுனன் உண்மையை உணர்ந்து தலைகுனிந்தான்.
இந்த புராண கதை என்ன உணர்த்துகிறது என்றால் தான எண்ணம் என்பது தன்னுள்ளே இருக்க வேண்டும் என்பதைத்தான்.
அதேபோல்தான் சிவாஜி கணேசனும். பொதுவாக ஒருவருக்கு அளவுக்கு மீறி பணம் வந்துவிட்டால் அதை பிறருக்கு கொடுத்து புகழ் சேர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் தானே ஒரு வறியவனாக இருக்கும்போது தானம் செய்யும் மனம் யாரிடம் இருக்கிறதோ அவனே உண்மையான தர்மவான். அப்படிப்பட்டவர்தான் சிவாஜி.
சினிமாவில் அவர் அடியெடுத்து வைக்கும்போது அவர் பணக்காரர் அல்ல. உணவு உணவுக்குகூட அரும்பாடுபட்ட காலம் அது. அந்த நேரத்தில் அவர் செய்த சேவையைஇங்கே குறிப்பிட விரும்புகிறேன். சுந்தரராஜன் என்பவர் இணைய தளத்தில் வெளியிட்ட தகவல் இது…
அது 1953-ம் ஆண்டு.
அப்போது சிவாஜிக்கு பராசக்தி படம் மட்டுமே வெளிவந்த நேரம்.
இலங்கை
யாழ்பாணத்தில் முனாய் ஆஸ்பத்திரியின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரபிள்ளை . இவர்
சிவாஜியை அணுகி இலங்கைக்கு
வரவழைத்து பெரிய அளவில் கவுரவித்திருக்கிறார்.
தன்னுடைய
மருத்துவமனை
கட்டிடங்களுக்கான நிதி திரட்டி
தரும்படி சிவாஜியிடம் கோரிக்கை
வைத்தார்.
சிவாஜியும்
பெருமகிழ்ச்சியோடு
ஒப்புகொண்டு, 30.11.53 அன்று
கொழும்பு, ஜிந்தப்பிட்டியில்,
முருகன் டாக்கீஸில் “என் தங்கை”
என்ற நாடகத்தை நடத்தி, நாடகத்தின் இறுதியில் பராசக்தி
வசனங்களை பேசினார். இதில்
வசூலான
பணம் ரூ.25 ஆயிரத்தை முனாய்
மருத்துவமனைக்கு நிதியாக
வழங்கினார்.
அப்போது சிவாஜி கணேசன் பராசக்தி படத்துக்காக வாங்கிய சம்பளம் வெறும் ரூ.2,500 தான். தன் சம்பளத்தை போல் பத்து மடங்கு தொகையை நிதியாக அளித்த வள்ளல் தன்மையை எப்படி சொல்வது.
பராசக்தி படம் வெற்றி பெற்றாலும் இனி படம் வருமோ…பணம் கிடைக்குமோ என்ற எண்ணத்தில் மேலும் பணம் சேர்க்கத்தான் ஒருவன் ஆசைப்படுவான். ஆனால் சிவாஜி அதற்கெல்லாம் ஆசைப்படாது, ரூ. 25 ஆயிரத்தை கொடுத்ததை இப்போது ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் அவரது கர்ணனத் தன்மை.
-கடையம் பாலன்.