காமராஜர்ஒரு சகாப்தம்/ முல்லை குமார்
1 min read
Kamaraj An Era / Mullai Kumar
காமராஜா் ஒரு சகாப்தம்
அவா் கட்டிய அணைகளை
அசைத்து பாா்க்க
எந்த
புயலுக்கும் தெம்பில்லை
அவா் விருது நகா் தந்த சீதனம்
அவரால் பயன் பெற்றோர் எண்ணிக்கை கொஞ்சம் இல்லை
அவா் அரசியல் காட்டாற்றில் மணத்த மல்லி கை பூ
அவரை கை நீட்டி
குறை சொல்ல யாருக்கும் துணிவில்லை
அவா் சுத்தமான பாலாறு
அதில் துளியும் பொய்யில்லை
அவா் விலை மதிப்பில்லா மாணிக்கம்
அவா் கையில் எந்த
அணிகலனும் இருந்ததில்லை
அவா் தமிழகத்துக்கு தந்தது அட்சயபாத்திரம்
அதில் அள்ள அள்ள
வளம் குறையவில்லை
அவா் ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரம்
அதில் இன்றளவும்
மாற்றம் இல்லை
அவா்
அனைவரும் வியக்கும் அதிசயம்
அது என்றும் நிலையானது
எங்கு சென்றாய் தலைவா
மீண்டும் பிறந்து வா
…கவிஞா் முல்லை குமாா்
=====
காமராஜா்
அவா்
காலம் தந்த கொடை
கோபுரத்தை அலங்காித்த
கற்பூர தீபம்
- அவா்
பெயருக்கு பின்னால்
பட்டங்கள் இல்லை –
அவரால் பட்டங்கள் பெற்றோர்
பல கோடி
கல்வி சாலைகள் அமைத்தாா்
க லை மகள் அருள் புரிந்தாா்
தொழிற் சாலைகள் அமைத்தாா்
வீடெங்கும் விளக்கேற்றினாா்
அ ணைகளை கட்டினாா்
விவசாயம் செழித்தது
ஆணைகள் இட்டாா்
ஏழைகளின் பை நிரம்பியது
மாணவா்களின் பசி அறிந்தாா்
மதிய உணவு திட்டம் பிறந்தது
நாட்டை பற்றியே
நினைத்தாா்
அவா் ஆட்சி சிறந்தது
நேர்மையாக நடந்தாா்
தமிழகம்உயா்ந்தது
எளிமையாக வாழ்ந்தாா்
எங்கும் ஏற்றம் ஏற்பட்டது
எங்கு சென்றாய்
தலைவா
மீண்டும் பிறந்து வா
-கவிஞர் முல்லை குமார்