April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

காந்தி, காமராஜர், சிவாஜிகணேசன் பற்றி கண்ணம்பிரத்தினம் பாடல்கள்

1 min read

Famous songs about Gandhi, Kamaraj, Shivaji Ganesan

2/10/2020
காந்தியின் தொண்டர் காமராஜர் என்றால் காமராஜரின் தொண்டர் சிவாஜிகணேசன். இவர்கள் மூவரை பற்றிய ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்கள் இசையில் பாடுவதற்கு ஏற்ப கவிதை படைத்துள்ளார்.
……
காந்திமகான் புகழ்ப் பாடல்(ஆயிரம் நிலவே வா.. பாடல் மெட்டில்)

காந்திஜியைப் புகழ்வோம்
மகாத்மா காந்திஜியைப் புகழ்வோம்
இசையோடு புகழ்பாடி
தமிழ்ப் பாடல்தனைப் பாடிப் பாடி
காந்திஜியைப் புகழ்வோம்
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் செய்யும் வழியைக் கண்டார்
அகிம்சை என்னும் ஆயுதத்தால்
சுதந்திரத்தை வாங்கித் தந்தார்
அன்னை விரதம் தந்த பாடம்
சத்தியாகிரகப் போராட்டம்
அந்த வழியில் வெற்றியைக் கண்டார்
அகிலமெல்லாம் பாராட்டும்.
உண்மை வாய்மை நேர்மைதனை
வாழ்நாளில் கடைப்பிடித்தார்
கண்ணியமாய் ஆட்சி செய்யும்
வழிமுறையை வகுத்துச் சொன்னார்
அந்த வழியில் ஆட்சிசெய்தால்
நாடு நல்ல வளம்பெறுமே
நல்லரசாய் வல்லரசாய்
நாடு நல்ல புகழ்பெறுமே!

-ஆசி. கண்ணம்பிரத்தினம்

காமராஜர் புகழ்ப் பாடல் (நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ… பாடல் மெட்டில்)

காந்திமகான் பிறந்தநாளில் காலமானாய்
காலமெல்லாம் தொண்டு செய்து உயிரைவிட்டாய்
உனக்கென்று நாட்டில் எதைத் தேடி வைத்தாய்
காமராஜ் என்ற பெயரை வாழவைத்தாய்
வீட்டுக்காக அன்னை – தந்தை உன்னை வளர்க்கவில்லை
நாட்டுக்காக அன்னை சிவகாமி உன்னை வளர்த்தாள்
ஒன்பதாண்டு சிறையில் இருந்து தியாகஜோதியானாய்
பத்தாண்டுகள் நாட்டை ஆண்டு கோடி நன்மை செய்தாய்
மனைவி மக்கள் சொகுசு வாழ்வை நீ கண்டதில்லை
வீணாக அரசுப் பணத்தைச் செலவு செய்ததில்லை
திட்டமிட்டு நாணயமாய் நல்ல ஆட்சி செய்தாய்
அணைகளையும் ஆலைகளையும் அமைத்துப் பயன் செய்தாய்.
-ஆசி. கண்ணம்பிரத்தினம்

====
சிவாஜி கணேசன் பற்றிய கவிதை…

நளினங்களின் நாயகன் சிவாஜி
வாழ்ந்துவிட்டுப் போய்விட்ட
மக்கள் பல கோடி
சிவாஜி என்ற சிகரம் என்றும்
மனங்களிலே வாழ்ந்திருக்கும்
ஒரு சாண் முகத்தினிலே
விதவிதமாய் உணர்வுகளை
ஒளிவிடச் செய்கின்ற
வித்தகத் திலகம் சிவாஜி
திரைப்படங்கள் உள்ளவரை
சிவாஜி குரல் ஒலித்திருக்கும்
அவர் நடிப்பு உள்ளங்களில்
நளினங்களை மிளிரவிடும்
மக்களின் உணர்வுகளை
நடிப்பினிலே உணர்த்தியவர்
அரசியலில் நடிப்பதற்கு
தெரியாமல் வாழ்ந்துசென்றார்
பார்த்து ரசிக்க நவரசத்தை விட்டுச்சென்றார்
கேட்டு ரசிக்க வசனங்களை விட்டுச்சென்றார்
கம்பீரத்தை உள்ளங்களில் விதைத்துச்சென்றார்
கலைமகளின் தலைமகனாய் என்றும் சிவாஜி வாழுகிறார்!
வாழ்க சிவாஜி!

ஆசி. கண்ணம்பிரத்தினம்

அண்ணன் சிவாஜி புகழ் வாழ்க …

அன்னை ராஜாமணி பெற்ற அருந்தவப்புதல்வன்
கலைக்கடவுள் படைத்துத் தந்த உத்தமபுத்திரன்
செந்தமிழின் பெருமை காக்கும் தெய்வமகன்
முத்தமிழின் சுவை காட்டும் உலக உத்தமன்
கலையுலகில் ஒளி காட்டும் அருணோதயம்
காலமெல்லாம் வளர்ந்து வரும் வளர்பிறை
திரையுலகம் உனக்கு என்றும் நீலவானம்
புகழ்வானில் சிறகடிக்கும் புதிய பறவை
பேசுகின்ற தமிழின் சுவை தேனும் பாலும்
பெருமை தரும் சொல்லின் வளம் பாலும் பழமும்
திருமகள் அமரும் மலர் செந்தாமரை
நினைவிலே நீயிருப்பாய் நெஞ்சிருக்கும் வரை
இதயத்திலே மலர்ந்து மணக்கும் பாசமலர்
தமிழகத்தில் புகழ் பெறும் கலைப் புதையல்
உன் நடிப்பை ரசிப்பதற்கு இரண்டு கண்கள்
போதாது என்றாலும் அதுவே சொர்க்கம்
உன் புகழைக் கேட்டு மகிழும் உன்னைப் பெற்ற தாய்
பூரித்துப் பொங்கிடுமே உன்னைப் பெற்றமனம்
நாட்டுப்பற்றை உணர்த்திட ஒரு கட்டபொம்மன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.