December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

மீண்டும் பிறந்து வா தலைவா…/ முல்லை குமார்

1 min read

Be born again, Kamaraj … / Mullai Kumar

4/10/2020
காமராஜா்
அவா் காலம் தந்த கொடை
கோபுரத்தை அலங்காித்த கற்பூர தீபம்

அவா் பெயருக்கு பின்னால் பட்டங்கள் இல்லை

அவரால் பட்டங்கள் பெற்றோர் பல கோடி

அவா் கல்வி சாலைகள் அ மைத்தாா்

கலை மகள் அருள் புரிந்தாா்
தொழிற் சாசலைகள் அமைத்தாா்

வீடெங்கும் விளக்கேற்றினாா்

அணைகளை கட்டினாா்

விவசாயம் செழித்தது

ஆணைகள் இட்டாா்

ஏழைகளின் பை நிரம்பியது
மாணவா்களின் பசி அறிந்தாா்
மதிய உணவு திட்டம் பிறந்தது
நாட்டைப் பற்றியே
நினைத்தாா்
அவா் ஆட்சி சிறந்தது

நேர்மையாக நடந்தாா்
தமிழகம் உயா்ந்தது

எளி மையாக வாழ்ந்தாா்

எங்கும் ஏற்றம் ஏற்பட்டது

எங்கு சென்றாய்
தலைவா

மீண்டும் பிறந்து வா

====

காமராஜா் ஒரு சகாப்தம்

அவா் கட்டிய அ ணைகளை

அசைத்து பாா்க்க எந்த
புயலுக்கும் தெம்பில்லை

அவா் விருதுநகா் தந்த சீதனம்
அவரால் பயன் பெற்றோர் எண்ணிக்கை கொஞ்சம் இல்லை
அவா் அரசியல் காட்டாற்றில் மணத்த மல்லிகை பூ

அவரை கை நீட்டி குறை சொல்ல யாருக்கும் துணிவில்லை

அவா் சுத்தமான பாலாறு

அதில் துளியும் பொய்யில்லை
அவா் விலை மதிப்பில்லா மாணிக்கம்

அவா் கையில் எந்த
அணிகலனும் இருந்ததில்லை

அவா் தமிழகத்துக்கு தந்தது அட்சயபாத்திரம்

அதில் அள்ள அள்ள
வளம் கு றையவில்லை

அவா் ஏ ழைகளின் நம்பிக்கை நட்சத்திரம்

அதில் இன்றளவும்
மாற்றம் இல்லை

அவா் அ னைவரும் வியக்கும் அதிசயம்

அது என்றும் நிலையானது

எங்கு சென்றாய் தலைவா

மீண்டும் பிறந்து வா

-கவிஞா் முல்லை குமாா்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.