தமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா்; 5,083 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona to 4,462 people in Tamil Nadu today; 5,083 discharged
14/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் 5,083 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,70,392 ஆகும்.
தமிழகத்தில் இன்று மட்டும் 192 ஆய்வகங்களில் 95,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 85 லட்சத்து 84 ஆயிரத்து 41 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
டிஸ்சார்ஜ்
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்2,701 பேர் ஆண்கள். 1,761 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,04,917.
பெண்களின் எண்ணிக்கை 2,65,443. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 .
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,083 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 52 பேர் இறந்துள்ளனர். இதில் 31 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 21 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை10,423 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 42,566 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் மட்டும் இன்று 1,130பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம்1 லட்சத்து 85 ஆயிரத்து 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர இன்று, கோவையில் 389பேருக்கும், சேலத்தில் 274 பேருக்கும், செங்கல்பட்டில் 272 பேருக்கும், திருவள்ளூரில் 207பேருக்கும், திருப்பூரில் 168 பேருக்கும், கடலூரில் 108 பேருக்கும், காஞ்சிபுரம், நாமக்கலில் தலா 140 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 50 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 45 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 11 பேரும், கோவையில் 5 பேரும், ஒருவரும், செங்கல்பட்டில் 4 பேரும்,மதுரை,கிருஷ்ணகிரி,திண்டுக்கல், திருவள்ளூர், வேலூரில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், சேலம், தலா 2 பேரும், நீலகிரி ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று சென்னையில் 1,217 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 478 பேரும், செங்கல்பட்டில் 326 பேரும், திருவள்ளூரில் 294 பேரும், சேலத்தில் 282 பேரும், நீலகிரியில் 192 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும், ஈரோடில் 160 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.