சமுத்திரகனியுடன் இணையும் பிக்பாக்ஸ் நடிகை
1 min read
Bigbox actress to team up with Samuthirakani
17-/10/2020
சமுத்திரகனியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க இருக்கிறார்.
சமுத்திர கனி
காலா, விஸ்வாசம் படங்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படத்தை அடுத்து தற்போது சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு
ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.
தற்போது சாக்ஷி அகர்வால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கும் இதில் அவருடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க இருப்பதாவும் கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.