“வெப்” தொடரில் நடிக்க வந்த ரம்யா பாண்டியன்
1 min read
Ramya Pandian to star in “Web” series
15/10/2020
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் “வெப்” தொடரில் நடிக்கிறார். அவர் சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக ஒரு வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் நடிப்பில் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது முகிலன் என்ற “வெப்” தொடர் ஒன்று உருவாகி உள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் கார்த்திக் ராஜ் நடித்திருக்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ “வெப்” தொடர் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது.
இதில் ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ ராம் இந்த வெப் சீரிசை இயக்கி இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
வருகிற 30-ந் தேதி ஜி5ல் இந்த வெப் தொடர் வெளியாக இருக்கிறது.