“ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை: அ.தி.மு.க. எங்களுக்கு நெருக்கமான கட்சி” அமித்ஷா பேட்டி
1 min read“Rajini has not started a party yet: AIADMK is the party closest to us” Amit Shah said
17-/10/2020
அ.தி.மு.க. எங்களுக்கு நெருக்கமான கட்சி என்றும் ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லைவே என்றும் அமித்ஷா கூறினார். ரஜினியுடன் கூட்டணி குறித்து பேச நாட்கள் உள்ளது என்று அவர் கூறினார்.
பாரதீய ஜனதா
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற உள்ளது. அதேபோல் சில மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய, மாநில கட்சிகள் கூட்டணியை பலப்படுத்த தயாராகி வரும் நிலையில், பாரதீய ஜனதாவும் ஒரு ஸ்திரமான இடத்தை பெற பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
பீகார் தேர்தல்
வரப்போகும் பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அடுத்த முதல்-மந்திரி நிதீஷ்குமார் தான்.
மேற்குவங்காளத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், அம்மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தொழிற்சாலை உள்ளது என கவர்னரின் அறிக்கை வாயிலாக தெரியவருகிறது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் மம்தா மீண்டும் மம்தா முதல்மந்திரியாக வரக்கூடாது என்பதில் அந்த மாநில மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
நிலம் பறித்த சீனா
முன்னர் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியா -சீன எல்லையில் பெருமளவு நிலத்தை சீன பறித்துள்ளது. இனி அது ஒரு போதும் நடக்காது. இந்தியாவிலிருந்து ஒரு இன்சி நிலத்தைகூட யாராலும் அபகரிக்க முடியாது.
ரஜினிகாந்த்
தமிழக அரசியலை பொறுத்தவரையில், பாரதீய ஜனதாவை பலப்படுத்த சில மாற்றங்கள் செய்து வருகிறோம். ஆளும் அ.தி.மு.க. எங்களுக்கு நெருக்கமான கட்சி. அந்தக் கட்சியுடன் இணைந்து இரு தேர்தல்களை சந்தித்துள்ளோம்.
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவருடன் கூட்டணி குறித்து பேச நாட்கள் உள்ளன.
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் மரணத்தை பாரதீய ஜனதா அரசியலாக்கவில்லை.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.