சிம்புக்கு ஒடிசா ரசிகை எழுத்திய உருக்கமான கடிதம்
1 min readA heartfelt letter written by an Odisha fan to Simbu
27/10/2020
நடிகர் சிம்புக்கு ஒடிசாவைச் சேர்ந்த ஒரு ரசிகை உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சிம்பு
சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ( திங்கட்கிழமை) வெளியானது. இந்த படத்திற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். அவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். சிம்பு இஸ் பேக் என கொண்டாடி வருகின்றனர்.
ரசிகை கடிதம்
இந்த நிலையில், ஒடிசாவை சேர்ந்த சிம்புவின் தீவிர ரசிகை ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அன்பை வெளிப்படுத்தும் அந்த கடிதத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளாா. அதில் கூறப்பட்டுஇருப்பதாவது:-
எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் இருப்பதால் என்னால் எதையும் பதிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். வாழ்க்கை நிலையில்லாதது. அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக.
நீங்கள் மீண்டும் சமூக வலைதளத்திற்கு வந்துள்ளது எங்களுக்கு மனநிறைவை தந்துள்ளது. மோஷன் போஸ்டர் மெய்சிலிர்க்கவைத்தது, அதை பார்த்து பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் அளிக்கிறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் அளிப்பதற்கு நன்றி. நீங்கள் சிறந்தவர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்கலங்கினார்
அவர் எழுதிய கடிதத்தை பார்த்து சிம்பு கண் கலங்கிவிட்டதாக, அவரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.