கார்த்தி நடக்கும் “சுல்தான்” படம் பொங்கல் அன்று வெளியீடு
1 min read
arthi’s upcoming film “Sultan” will be released on Pongal
26/10/2020
கார்த்தி நடிக்கும் “சுல்தான்” படம் பொங்கல் அன்று வெளியிடப்படுகிறது.
கார்த்தி படம்
ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி கையில் சாட்டையுடன் மாஸான லுக்கில் இருக்கிறார். இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.