“விசா”வுக்காக திருமணம் செய்த நடிகை ராதிகா ஆப்தே
1 min read
Actress Radhika Apte married for “visa”
27/10/2020
நடிகை ராதிகா ஆப்தே விசா பெறுவதற்காக லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த பிறகு மிகவும் பிரபலமானார்.
இந்தியில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். ராதிகா ஆப்தே இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
காதல் திருமணம்
ராதிகா ஆப்தேவும் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கொரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி உள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது ராதிகா ஆப்தேவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
விசா
அதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, “எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. விசா பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விசா எளிதாக கிடைத்துவிடும் என்று அறிந்தேன். அதனால் தான் திருமணம் செய்தேன். ஆனாலும் இது நியாயமற்ற செயல் தான்” என்றார்.
ராதிகா ஆப்தேவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.