ஊரடங்கு காலத்தில் உடல் அமைப்பை மாற்றிய சிம்பு
1 min readSimbu who changed the body structure during the curfew
31/10/2020
கொரோனா ஊரடங்கு நடிகர்-நடிகைகள் வெளியே வராமல் இருந்தனர். ஆனால் பலர் தங்களது படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
ஊரடங்கு நேரத்தில் நடிகர் சிம்பு தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு.
அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.
தங்கை
சிம்புவின் இந்த டுவீட்டைக் குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள்.
இவ்வாறு இலக்கியா தெரிவித்துள்ளார்.