June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பள்ளி பஸ்-லாரி மோதிய விபத்தில் 21 பேர் பலி

1 min read

21 killed in school bus-truck collision

31/10/2020

நைஜீரியா நாட்டில் பள்ளிக்கூட பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில் 21 பேர் பலியானார்கள்

பள்ளிக்கூட பஸ்

நைஜீரியா நாட்டின் இநூகு மாகாணம் அவ்கு நகரில் மழலையர் பள்ளிக்கூட பஸ் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பள்ளி குழந்தைகள் 61 பேரும், சில ஆசிரியர்களும் இருந்தனர்.

அவ்கு நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த லாரி பள்ளி பஸ் மீது வேகமாக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்த பஸ் நிலைகுலைந்து கவிழ்ந்தது.

21 பேர் சாவு

இந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மிகவேகமாக வந்த லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *