June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல்முறையாக பொங்கல் விடுமுறை அறிவிப்பு

1 min read

Pongal holiday announcement for the first time to the Supreme Court

26/11/2020
சுப்ரீம் கோர்ட்டுக்கு முதன்முறையாக பொங்கல் பண்டிகை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுறை

சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த ஆண்டுகான (2021) விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கல் அன்றும் சுப்ரீம் கோர்ட்டு இயங்கும். ஆனால் வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கோர்ட்டு மதியம் ஒரு மணிக்கே மூடப்படும். பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழர் திருநாளுக்கும் விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை வரும் 2021-ம் ஆண்டு தான் நடமுறைக்கு வர உள்ளது.

பொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம்கோர்ட்டுக்கு விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *